/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அயலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்ற அமீரக ஊடவியலாளர்
/
அயலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்ற அமீரக ஊடவியலாளர்
அயலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்ற அமீரக ஊடவியலாளர்
அயலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்ற அமீரக ஊடவியலாளர்
ஜன 25, 2025

துபாய் : சென்னையில் நடந்த அயலகத் தமிழர் மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பொதுமக்கள் பங்கேற்றனர். துபாய் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயது மாநாட்டில் நடந்த அமர்வில் 'தாயகம் கடந்த தமிழ் ஊடகங்கள்' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இந்த அமர்வில் சிங்கப்பூர் நூலகத்துறை அலுவலர் அழகிய பாண்டியன், மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் உரை நிகழ்த்தினர். வளைகுடா பகுதி அயலக தமிழர் நல வாரிய உறுப்பினர் எஸ்.எஸ். மீரான் உள்ளிட்ட குழுவினர் வளைகுடா பகுதியில் இருந்து அதிகமானோர் பங்கேற்க தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement