
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷார்ஜா: ஷார்ஜாவில் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு அந்த அமைப்பின் நிறுவன தலைவர் ஜாஸ்மின் அபுபக்கர் தலைமை வகித்தார். ஷார்ஜா ரத்ததானம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட முகாமில் 125 க்கும் மேற்பட்டோர் தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.
ரத்ததானம் செய்தவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். உயிர்காக்க உதவும் ரத்ததானத்தை இன, மத, நாடு என்ற வேறுபாடின்றி செய்த அனைவருக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement