/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சவுதி அரேபியாவில் ரத்ததான முகாம்
/
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சவுதி அரேபியாவில் ரத்ததான முகாம்
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சவுதி அரேபியாவில் ரத்ததான முகாம்
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சவுதி அரேபியாவில் ரத்ததான முகாம்
ஜன 29, 2025

76 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சவுதி அரேபியா அல்கசீம் மண்டலத்தில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) நடத்திய மாபெரும் ரத்ததான முகாம், மண்டலத் தலைவர் மங்களக்குடி பக்கீர் முஹைதீன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மண்டல மருத்துவர் அணி செயலாளர் மதுரை டாக்டர் ஆண்டோ விளாடிமிர் வழி நடத்த. மண்டல செயலாளர் திருச்சி ரிஸ்வான், மண்டல மக்கள் தொடர்பாளர் வடகரை ஹுசைன் ஹஜரத் மண்டல அலுவலக செயலாளர் சிறுகடம்பூர் ஜாகிர் உசேன் நாட்டாமை ஆகியோர் முன்னிலையில் கிளை நிர்வாகிகளான விழுப்புரம் கௌஸ் இக்பால், வடகரை இஸ்மாயில் டைல்ஸ், மயிலாடுதுறை ஹுசேன் மெக்கானிக், கும்பகோணம் நதிம், பரமக்குடி பரக்கத் அலி, அய்யம்பேட்டை பொறியாளர் ஃபைசல் அஹ்மத், நாகர்கோயில் அமீர் ஆகியோர் ஒருங்கிணைக்க திருத்துறைப்பூண்டி சிவா மற்றும் அய்யம்பேட்டை கார்ட்டூன் மன்னார் அலி ஆகியோரின் அனுசரணையுடனும் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு கொடையாளர்களாக டாக்டர் ஜெகநாதன், டாக்டர் சக்கரவர்த்தி, டாக்டர் ஹரி ராமச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். உதவியாளர்களாக டாக்டர் நாசினின் மற்றும் சிஸ்டர் ஆணி ரிச்சர்ட் மேரி ஆகியோர் செயல்பட்டனர். திரளான மக்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினர். கலந்து கொண்ட, சிறப்பித்த, அனுசரணை வழங்கிய, ஒத்துழைப்பு நல்கிய, அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை IWF இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அல் கசிம் மண்டலம் தெரிவித்துக் கொள்கிறது.
- தினமலர் வாசகர் ஷாஜஹான் யான்பு
Advertisement