/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
மஸ்கட் இந்திய தூதரகத்தில் ரத்ததான முகாம்
/
மஸ்கட் இந்திய தூதரகத்தில் ரத்ததான முகாம்
ஏப் 02, 2024

மஸ்கட் : மஸ்கட் இந்திய தூதரகத்தில் ரத்ததான முகாமை இந்திய தூதர் அமித் நாரங் மற்றும் மஸ்கட் சுகாதார சேவைத்துறையின் பொது இயக்குநர் டாக்டர் தமரா அல் கப்ரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது பேசிய இந்திய தூதர் அமித் நாரங், ஓமன் நாட்டில் விபத்து உள்ளிட்ட மருத்துவ பிரச்சனைகளால் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காக ரத்தத்தின் தேவையானது மிகவும் அத்தியாவசியமாக இருந்து வருகிறது. இந்த சேவையில் இந்தியர்களின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ரத்ததான முகாம் நடக்கிறது. இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் பங்கேற்று உயிர் காக்கும் ரத்ததானம் வழங்க வேண்டும் என்றார்.
மஸ்கட் சுகாதார சேவைத்துறையின் பொது இயக்குநர் டாக்டர் தமரா அல் கப்ரி பேசியதாவது : தன்னார்வத்துடன் ரத்ததானம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள இந்திய தூதரகத்தின் மனிதாபிமான பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்தியர்கள் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் அதிகமாக இதில் பங்கேற்றுள்ளது சிறப்புக்குரியது. இதற்காக எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்த ரத்ததான முகாமை தொடர்ந்து ஏப்ரல் 4 முதல் 6 ஆம் தேதி வரை இந்திய தூதரக அரங்கில் காலை 8 மணி முதல் மாலை 2 மணி வரை நடைபெறும். பவுசர் ரத்ததான மையத்தில் தினமும் மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் ரத்ததானம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement