/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அஜ்மானில் தொழிலாளர்களுக்கு போர்வை
/
அஜ்மானில் தொழிலாளர்களுக்கு போர்வை

அஜ்மான்: கிரீன் குளோப் அமைப்பு சார்பில் அமீரக செம்பிறை சங்கத்தின், அஜ்மான் சென்டர் அனுமதியுடன் இணைந்து நடத்திய தொழிலாளர்களுக்கு இலவசமாக போர்வை தானம் வழங்கும் நிகழ்ச்சி அஜ்மான் மாநகராட்சியின் தொழிலாளர் முகாமில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அமீரகத்தில் இந்த வருடம் வாட்டுகின்ற கடும் குளிரை கருத்தில் கொண்டு நலிவுற்ற 300 ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான போர்வைகளும் கேக், பழங்கள் மற்றும் குளிர்பானங்கள் அடங்கிய (Snacks Box) உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டது.
அஜ்மான் அமீரக செம்பிறை சங்கத்தின் உயர் அதிகாரி ஷேக் முஹம்மது முதீர் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று கிரீன் குளோப் அமைப்பு செய்து வரும் சமூக சேவைகளை மனமுவந்து பாராட்டினார். போர்வை தானம் உதவி செய்ய முன்வந்த நல்லுள்ளங்களுக்கும் மேலும் உற்சாகத்துடன் இந்நிகழ்வில் பங்குபெற்று சேவையாற்றிய பள்ளி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
ஜாஸ்மின் அபுபக்கர் உள்ளிட்ட குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement