/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் தமிழக வக்பு வாரிய தலைவர் கே.நவாஸ்கனிக்கு பாராட்டு
/
துபாயில் தமிழக வக்பு வாரிய தலைவர் கே.நவாஸ்கனிக்கு பாராட்டு
துபாயில் தமிழக வக்பு வாரிய தலைவர் கே.நவாஸ்கனிக்கு பாராட்டு
துபாயில் தமிழக வக்பு வாரிய தலைவர் கே.நவாஸ்கனிக்கு பாராட்டு
அக் 04, 2024

துபாய் : துபாயில் ராயல் டயமண்ட் குழுமத்தின் சார்பில் தமிழக வக்பு வாரிய தலைவர் கே. நவாஸ்கனிக்கு பாராட்டு விழா நடந்தது.
விழாவுக்கு ராயல் டயமண்ட் குழுமத்தின் தலைவரும், ஆலியா டிரேடிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான ஷேக் தாவூது தலைமை வகித்தார்.
ராயல் டயமண்ட் குழுமத்தின் துணைத்தலைவரும், நோபிள் மரைன் குழுமத்தின் மேலாண்மை இயக்குநருமான சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார்.
ராயல் டயமண்ட் குழுமத்தின் பொதுச் செயலாளரும், ஆரிபா குழுமத்தின் தலைவருமான சுல்தானுல் ஆரிபின் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பிளாக் துலிப் பிளவர்ஸ் நிறுவனத்தின் எகியா வாழ்த்துரை வழங்கினார்.
கே. நவாஸ்கனி தனது ஏற்புரையில், தொண்டி, கீழக்கரை வழியாக தூத்துக்குடிக்கு ரயில் சேவையை ஏற்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். வக்ஃப் வாரியத்தின் மூலம் வக்ப் சொத்துக்கள் பொதுமக்கள் பயன்படும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
ராயல் டயமண்ட் குழுமத்தின் சார்பில் நவாஸ்கனிக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழாவில் தொழிலதிபர் சையத் எம். சலாஹுதீன், அலைடு மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கமால், சூப்பர்சோனிக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜியாவுதீன், அதீப் குழுமத்தின் அன்சாரி, பி.எஸ்.எம். ஹோல்டிங் நிறுவனத்தின் ஹபிபுல்லா கான், ரேடியண்ட் ஸ்டார் நிறுவன மேலாண்மை இயக்குநர் ஆபித் ஜூனைத், கராமத்துல்லா, ஹாஜா முகைதீன், ஜெய்லான் பாஷா உள்ளிட்ட வர்த்தக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் அமீரக காயிதேமில்லத் பேரவை, அய்மான், ஈமான், தமிழ் பெண்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் விழாவில் பங்கேற்றனர்.
பவர் குரூப் ஜாகிர் உசேன் நன்றி கூறினார். விழாவை ஏ. முகம்மது தாஹா தொகுத்து வழங்கினார்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement