sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஐரோப்பா

/

செய்திகள்

/

கனடாவைச் சேர்ந்த பாவலர் புட்பா கிறிட்டிக்கு இலண்டனில் உலகத் தமிழ் விருது

/

கனடாவைச் சேர்ந்த பாவலர் புட்பா கிறிட்டிக்கு இலண்டனில் உலகத் தமிழ் விருது

கனடாவைச் சேர்ந்த பாவலர் புட்பா கிறிட்டிக்கு இலண்டனில் உலகத் தமிழ் விருது

கனடாவைச் சேர்ந்த பாவலர் புட்பா கிறிட்டிக்கு இலண்டனில் உலகத் தமிழ் விருது


ஜூன் 20, 2025

Google News

ஜூன் 20, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இலண்டன்: தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கல்விச் சேவைகளில் உலகளாவிய அடையாளம் வகித்திருக்கும் கனடா வாழ் பாவலர் மணி முனைவர் புட்பா கிறிட்டி, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் சாதனையாளர்களுக்கான விருது விழாவில் சிறப்பிக்கப்பட்டார். இலங்கையில் பிறந்து, தற்போது கனடாவை தாய்நாடாக நேசித்து வாழும் புட்பா கிறிட்டி, தமிழ் இலக்கண நூல்கள், தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியங்கள் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமை பெற்றவர். திருக்குறளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதோடு, இந்தியா, இலங்கை மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிப்பது, தொல்காப்பியம் கற்றுக் கொள்பவர்களுக்கு வழிகாட்டுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார்.


கனடாவில் தமிழ் மொழிக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் இவர், தமிழ் எழுத்தாளர்களை உலகளவில் இணைக்கும் வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் அமைப்பு (NATAWO) 'நடவு' அமைப்பில் கனடா உலகத் தூதுவராகவும் இலக்கியத் தொண்டாற்றி வருகிறார்.


இந்த விருது வழங்கும் விழா, குராய்டன் தமிழ் சங்கம் நடத்திய உலகளாவிய நிகழ்வாக இருந்தது. உலகின் பல நாடுகளில் இருந்து வந்த தமிழறிஞர்களும் சிறப்புமிக்க எழுத்தாளர்களும் கலந்து கொண்ட இவ்விழா, தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.


'சூன் 18, 2025 - எனது வாழ்வில் மறக்க முடியாத மாலை' என்று புட்பா கிறிட்டி தம் அனுபவத்தைப் பகிர்ந்தார். 'தமிழரின் சிறப்பையும் சாதனைகளையும் ஒன்றாகக் கொண்டாடும் அந்த அரங்கத்தில் பங்கேற்றேன் என்பது பெருமிதம் அளிக்கிறது. கனடாவின் சார்பாக உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவ்விழாவில் இலண்டனின் முதல் தமிழ் எம்.பி. உமா குமாரன் எனக்கான விருதை வழங்கியது என் வாழ்வில் ஒரு மறக்கமுடியாத சிறப்பு தருணமாகும்,' எனக் கூறினார்.


மேலும், இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த முனைவர் பாட்டழகன், லண்டன் துணை முதல்வர் அப்பு தாமோதரன் மற்றும் முனைவர் சிவா பிள்ளை ஆகியோருக்கு அவர் தனது நன்றியை தெரிவித்தார்.


கனடா கல்வி முறையைப் பற்றி இரண்டு நிமிட உரையாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதை அவர் ஏற்றுக் கொண்டு, அந்த தருணத்தையும் மகிழ்ச்சியுடன் அனுபவித்ததாகவும் கூறினார்.


தமிழ்மொழி மற்றும் கல்வி பரப்பிலும், இலக்கியத் தொண்டிலும் தனது ஒளிவட்டத்தை மேலும் விரிவுபடுத்தி வரும் முனைவர் புட்பா கிறிட்டிக்கு இந்த உலகத் தமிழ் விருது ஒரு சான்றாக அமைகிறது.


- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us