/
உலக தமிழர்
/
வெளிநாட்டு தகவல்கள்
/
வளைகுடா மக்களை கவர்ந்து வரும் மஸ்கட் சுல்தான் காபூஸ் பெரிய பள்ளிவாசல்
/
வளைகுடா மக்களை கவர்ந்து வரும் மஸ்கட் சுல்தான் காபூஸ் பெரிய பள்ளிவாசல்
வளைகுடா மக்களை கவர்ந்து வரும் மஸ்கட் சுல்தான் காபூஸ் பெரிய பள்ளிவாசல்
வளைகுடா மக்களை கவர்ந்து வரும் மஸ்கட் சுல்தான் காபூஸ் பெரிய பள்ளிவாசல்
டிச 30, 2024

மஸ்கட்: வளைகுடாவில் பொதுமக்களை கவர்ந்து வரும் மஸ்கட்டில் உள்ள சுல்தான் காபூஸ் பெரிய பள்ளிவாசல் அமைந்துள்ளது.
ஓமன் நாட்டின் மன்னராக இருந்து மறைந்த சுல்தான் காபூஸ் பின் சையத் தனது நாட்டில் மிகப்பெரிய பள்ளிவாசல் ஒன்று இருக்க வேண்டும் என கடந்த 1992 ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவையடுத்து கடந்த 1993 ஆம் ஆண்டு பள்ளிவாசல் வடிவமைப்பிற்கான போட்டி நடந்தது. 1994 டிசம்பரில் மஸ்கட்டின் பவுசர் பகுதியில் பள்ளிவாசல் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமானம் தொடங்கியது. ஆறு ஆண்டுகள் ஏழு மாதங்களில் பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்காக 3 இலட்சம் டன் எடைகொண்ட பளிங்கு கற்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பள்ளிவாசல் வளாகத்தை சுற்றி ஐந்து உயரமான மினராக்கள் உள்ளது. இதில் ஒரு மினரா மட்டும் 90 மீட்டர் உயரம் கொண்டது. பள்ளிவாசலின் உள் பகுதியில் மட்டும் 6,500 பேர் தொழுகை செய்ய முடியும். பள்ளிவாசல் வளாகத்தை சுற்றிலும் எட்டாயிரம் பேர் தொழுகை செய்யும் வசதியுள்ளது. பள்ளிவாசல் கடந்த 2001 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் நாள் சுல்தான் காபூஸின் 30 ஆண்டுகள் ஆட்சியை கொண்டாடும் வகையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
இந்த பள்ளிவாசலை வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமன்றி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டினரும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா