/
உலக தமிழர்
/
வெளிநாட்டு தகவல்கள்
/
அமெரிக்காவின் உல்லாச கீவெஸ்டும் கியூபாவும்
/
அமெரிக்காவின் உல்லாச கீவெஸ்டும் கியூபாவும்
டிச 25, 2024

புளோரிடா மாநிலத்தில் கீவெஸ்ட் அமெரிக்காவின் தென்மேற்கு எல்லையில் உள்ள தீவு! மிக பிரசித்தம். புளோரிடா கீஸ் தீவுகளில் இதுவும் ஒரு அங்கம்.
கடலில் 90 மைல் அந்தப் பக்கம் கியூபா! அந்தப்பக்கமிருந்து கள்ளத் தோணியில் ஆசாமிகள் ஊடுருவும் அபாயம் உள்ளதால் அங்கு பலமான பாதுகாப்பு வளையம்.
எல்லையில் ஆம்புலன்ஸ் சைரன் போல டூம் அமைத்து அதை பார்வையிட உல்லாச பயணிகள் அணிவகுப்பு. நாங்களும் குடும்பத்துடன்!
அத்துடன் காத்திருந்து சூரிய அஸ்தமனம்! போர்ட் சாகரீ டெய்லர், டுவால் கடைவீதி, இரவு கேளிக்கைகள், சுறா உணவு வகைகள்--
வரலாற்று கோட்டை, பூங்கா,வாட்டர் ஸ்போர்ட், ஜெட்ஸ்கே நீர் மோட்டார் பாய்ச்சல் ( Jetski ), கடலுக்குள் குரூஸ் சுற்று என ஜில் ஜில்லாய் உல்லாசத்திற்கு அங்கு பஞ்சமில்லை.
இப்படி பணம் கரக்க அங்கே பல வழிகள். பர்ஸ் பத்திரம்!
- என்.சி. மோகன்தாஸ் with விஜய்- தினேஷ்; படக் கலவை: வெ. தயாளன்