/
உலக தமிழர்
/
ஆஸ்திரேலியா
/
செய்திகள்
/
ஆக்லாந்தில் கோடி விஷ்ணு நாம பாராயணம்
/
ஆக்லாந்தில் கோடி விஷ்ணு நாம பாராயணம்

ஆக்லாந்தில் பஜன் சத் சங்கம் கடந்த 11, 12, 13 தேதிகளில் கோடி விஷ்ணு நாம பாராயணம் நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சி ஷீர்டி சாயிபாபா கோயிலில் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் மிகுந்த பக்தியுடனும் சிரத்தையுடன் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தனர். மூன்று நாட்கள் நடந்த இந்த வைபவம் ஞாயிறு சீதா கல்யாணத்துடன் நிறைவு பெற்றது.
இவ்வைபவத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்ரீ சின்ன ஜீயர் ஸ்வாமிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர் ஸ்ரீ ராமரின் கல்யாண குணங்களை கூறி பக்தர்களுக்கு அனுக்ரஹம் வழங்கினார். இந்த நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடத்திய வெங்கட் மற்றும் கவிதா வெங்கட் ஆகியோரின் அயராத பக்த சேவை மிகவும் போற்றத்தக்கது. மூன்று நாட்களும் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி, மதியம் மற்றும் இரவும் சிறப்பான முறையில் சாப்பாடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்
Advertisement