/
உலக தமிழர்
/
ஆஸ்திரேலியா
/
செய்திகள்
/
ஆக்லாந்தில் புரி ஜெகந்நாத ரத யாத்ரா
/
ஆக்லாந்தில் புரி ஜெகந்நாத ரத யாத்ரா

ஆக்லாந்தில் புரி ஜெகந்நாத ரத யாத்ரா விழாவை ஒவ்வொரு வருடமும் பஜன் சத் சங்க அமைப்பினர் நடத்தி வருகிறார்கள். இந்த வருடம் சங்க அமைப்பின் தலைவர் வெங்கட் அவரது மனைவி கவிதா வெங்கட் மிகச் சிறப்பாக அவரது இல்லத்தில் நடத்தினர்.
புரி ரத ஊர்வலம் என்பது ஒடிசா மாநிலத்தில் புரி நகரத்தில் ஆண்டுதோறும் ஆஷாட மாதத்தில் நடைபெறும் ஒரு முக்கியமான விழாவாகும். ஸ்ரீ ஜகந்நாதர் தம் சகோதரர் பலராமர் மற்றும் சகோதரி சுபத்திராவுடன் குண்டீஸா கோவிலுக்கு தேரில் செல்லும் விழாவாகும். மக்களை காக்க ஏழு நாட்கள் கோவர்த்தன மலையை தூக்கி நின்ற கிருஷ்ணனை இந்த ஜகத்தையே காப்பாற்றியவரை ஜெகந்நாதனாக போற்றி வழிபடும் விழாவாகும், அவர் 7 நாட்கள் எதுவும் சாப்பிடாமல் இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் பின்னர் தினமும் 8 முறை உணவருந்தியதாக வரலாறு. அதனால் அந்த கணக்குப்படி அவருக்கு ஐம்பத்தாறு வகையான உணவை நிவேதனம் செய்வது இந்த விழாவின் சிறப்பம்சம்.
காலை 10.30 மணிக்கு த்யான ஸ்லோகத்துடன் தொடங்கியது. பின்னர் குரு வந்தனம், ஆதித்ய ஹ்ருதயம், கஜேந்திர ஸ்துதி, வாசுதேவ அஷ்டகம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் பஜனை பாடல்கள் பக்தர்கள் அனைவரும் பாடினார்கள்.. அவருக்கு சப்பன் போக் எனப்படும் 56 வகையான நிவேதனங்கள் செய்து ஆர்த்தி ஆராதனையுடன் மிகச் சிறப்பாக நடந்தேறியது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ ஜெகந்நாதரின் ஆசியை பெற்றனர். அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்
Advertisement