
ஆஸ்திரேலியாவில் பல நகரங்களில் நவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மெல்போர்ன் நகரில் உள்ள ஆர்எம்ஐடி பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்கள் உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
பெர்த் நகரில் உள்ள இந்து கோயிலில் ஏராளமான மக்கள் நவராத்திரி விழாவில் கலந்து கொண்டனர். தேவியர் வேடமிட்டு சிறுவர் சிறுமியர் அசத்தினர். சிறுவர் சிறுமியரின் காவடி ஆட்டமும் அனைவரையும் கவர்ந்தது.
குஜராத்தி சமாஜம் சார்பில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் ஆண்களும் பெண்களும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
நவராத்திரி விரதம் என்பது சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று. நவராத்திரி காலத்தில் முதல் மூன்று நாட்கள், வீரத்தை வேண்டி துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை வேண்டி இலட்சுமியையும், இறுதி மூன்று நாட்கள் கல்வி, கலைகளை வேண்டி கலைமகளையும் வழிபடுகின்றனர்.
இந்த விழா உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.
Advertisement