
ஆக்லாந்தில் பத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. மகாசிவராத்திரியன்று அனைத்து கோயிலிலும் மிக சிறப்பான முறையில் சிவனுக்கு அபிஷேகம் அர்ச்சனை நடைபெற்றது.
ஆஸ்திக பக்த சங்கீர்த்தன சமாஜத்தின் சார்பில் மாலை 6 மணி முதல் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஒனேஹுங்கவில் உள்ள சாந்தி நிவாசில் சிறப்பு அபிஷேகம் பூஜை நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் பதினோரு முறை ருத்ரம் ஜபித்தும், வேத மந்திரங்கள் ஓத சிவலிங்கத்திற்கு பால், தயிர், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகங்கள் யாவும் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது நேரில் காண மிகவும் பக்தி பரவசமாக இருந்தது.
இரவு 11 மணியளவில் பதினோரு முறை ருத்ராபிஷேகம் முடித்த பிறகு சிவனுக்கு அர்ச்சனை மற்றும் பலவித ஆர்த்திகளுடன், நைவேத்யத்துடன் சிவ வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது. அவ்வமயம் பக்தர்கள் பஜன் மற்றும் பக்தி பாடல்கள் பாடி இறைவனை துதித்தனர். பக்தர்கள்
அனைவரும் நெஞ்சுருக வேண்டி இறைவனின் அருளை வேண்டி பெற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் அபிஷேக நைவேத்ய பிரசாதம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்
Advertisement