
ஆக்லாந்தில் ஐயப்ப பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது. ராகவன் தலைமையில் ஆண்டுதோறும் அவருடைய இல்லத்தில் நடைபெறும் இந்த சிறப்பு பூஜையில், சுவாமி ஐயப்பனுக்கு வேண்டி மாலை அணிந்து விரதம் இருந்து பக்தர்கள் அனைவரும் இருமுடி கட்டி ஐயப்பனுக்கு பூஜை செய்து சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர். மறுநாள் அனைவரும் இருமுடியுடன் ஆக்லாந்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும்- சுவாமி நாராயணன் கோயில், திருமுருகன் கோயில், திரு சுப்பிரமணிய சுவாமி கோயில்- சென்று வழிபட்டனர்.
இறுதியில் பப்பாகுராவில் அமைந்துள்ள ஸ்ரீ கணேஷ் கோயிலுக்கு சென்று இரு முடியை இறக்கி சந்துரு குருக்கள் ஐயப்பனுக்கு பலவித அபிஷேகங்கள், குறிப்பாக பக்தர்கள் கொண்டு வந்த இருமுடியில் இருந்து நெய்யை எடுத்து ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்தார். மிகச்சிறப்பான முறையில் அனைத்து அபிஷேகமும் ஆராதனையும் அர்ச்சனையும் செய்யப்பட்டது. அச்சமயம் பக்தர்கள் வேத கோஷங்கள் செய்தும் பல்வேறு ஐயப்ப கோஷங்கள் செய்தும் ஐயப்பனை வழிபட்டனர். பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷம் செய்து ஐயப்பனை மனம் குளிர பிரார்த்தித்து வழிபாடு செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியசளர் சந்திர சங்கரன்
Advertisement