/
உலக தமிழர்
/
ஆஸ்திரேலியா
/
செய்திகள்
/
"அரும்புமா" தனி இசைப்பாடல் வெளியீடு
/
"அரும்புமா" தனி இசைப்பாடல் வெளியீடு

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நவம்பர் 8ம் தேதி, ஆஸ் தமிழ் டிவி (AUS TAMIL TV) ஆசாத் காமில் நடத்திய 'அக்னி சிறகுகள்' நிகழ்ச்சியில் - மெல்போர்ன் வாழ் தமிழர்கள் கௌஷிக் கணேசன்(இசையமைப்பாளர்) மற்றும் விஜய் ராகவன் (பாடலாசிரியர்) இருவரும் இணைந்து உருவாக்கிய 'அரும்புமா' - என்கின்ற தனி பாடலை திரை பாடலாசிரியர் யுகபாரதி, மற்றும் கோபிநாத் வெளியிட்டனர்.
ஹரிச்சரன், தீப்தி சுரேஷ், பத்மஜா ஸ்ரீனிவாசன் பாடிய இந்த பாடலை 'Keys & Verses Collective'-இன் இசை குழு, அவர்களது youtube மற்றும் Spotify சேனல் வாயிலாக வருகிற Nov-22nd அன்று வெளியிட உள்ளனர்.
'Keys & Verses Collective'-இன் முதல் பாடலான 'தமிழா' - A New Age Tamil Anthem, புலம்பெயந்த தமிழர்களின் பெருமையையும், அவர்களின் தமிழ் மொழிப்பற்றையும் கூறும் வகையில், உலக தமிழர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 'மழை துளிகள்', 'காற்றாக வா நீ', 'என்ன கணக்கு மக்கா' ஆகிய பாடல்கள் இணையதள ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ஐந்தாவது பாடலான 'அரும்புமா' வை உள்ளிட்டு அனைத்து பாடல்களையும் சத்யப்ரகாஷ் Record Producer ஆக பணி புரிந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடு வாழ் தமிழர்கள் இவ்வாறு தனி இசைப்பாடல் கலைஞர்களாக வளர்ந்து வருவது நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இது அந்த கலைஞர்களை மேலும் ஊக்கப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
'Keys & Verses Collective' பற்றி மேலும் விவரம் அறிய https://www.youtube.com/@keysnverses
என்ற தடத்திற்கு செல்லவும்.
ஆஸ் தமிழ் டிவி (AUS TAMIL TV) பற்றி மேலும் விவரம் அறிய https://austamil.tv/ என்ற தடத்திற்கு செல்லவும்.
- நமது செய்தியாளர் இளங்கோ K.R
Advertisement