/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
சென். ஜூடி பாராமெடிக்கல் கல்லூரியின் தாதியர் மகுடம் சூட்டும் விழா
/
சென். ஜூடி பாராமெடிக்கல் கல்லூரியின் தாதியர் மகுடம் சூட்டும் விழா
சென். ஜூடி பாராமெடிக்கல் கல்லூரியின் தாதியர் மகுடம் சூட்டும் விழா
சென். ஜூடி பாராமெடிக்கல் கல்லூரியின் தாதியர் மகுடம் சூட்டும் விழா
செப் 01, 2025

கொழும்பு: சென். ஜூடி பாராமெடிக்கல் கல்லூரியின் தாதியர் மகுடம் சூட்டும் விழா மற்றும் NVQ சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் - 2025 கல்லூரியின் முதல்வர் சப்ராஸ் மன்சூர் தலைமையில் (31) இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பாவா ரோயலி மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
பாராட்டுகளும், பெருமையும் கலந்து நெஞ்சை நெகிழவைக்கும் ஒரு நாளாக இந்நிகழ்வு பதியப்பட்டுள்ளது. எதிர்கால சுகாதார சேவையின் நம்பிக்கையான கைங்கரியங்களாக மாணவர்கள் களமிறங்கும் சிறப்பு நிகழ்வாகவும் இந்நிகழ்வு இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
நமது இலங்கை வாசகர் , எம்.எஸ்.எம்.ஸாகிர்
Advertisement