/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
தைவானில் சித்திரைத் திருவிழா கொண்டாட்டம்
/
தைவானில் சித்திரைத் திருவிழா கொண்டாட்டம்
மே 19, 2025

தைவானில் ஒன்பதாம் ஆண்டு சித்திரைத் திருவிழா கொண்டாட்டம் சிறப்பாகவும், தமிழ் பாரம்பரியத்ததுடனும் தைபேயில் அமைந்துள்ள பூ ஜென் பல்கலைக்கழகத்தின் ரிச்சி உள்ளரங்கத்தில் விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆண்டும் வழக்கம்போல, தைவானில் வாழும் தமிழர்கள் மட்டுமன்றி பல்வேறு நாட்டு மக்களும் கலந்து கொண்டு தமிழர் பாரம்பரிய விழாவை சிறப்பித்தனர். சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டு தமிழர் திருவிழாவை மகிழ்வுடன் கொண்டாடினர்.
விழா தொடக்கமும் சிறப்பு விருந்தினர்களும்
விழாவிற்குத் திறப்புரை வழங்கிய தைவான் தமிழ்ச்சங்கத் துணைத் தலைவர் மற்றும் சிறுமியர்களுக்கான , வரவேற்பு உரையின் மூலம் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்களை வரவேற்றார்.இந்த பெருமை மிக்க சித்திரைத் திருவிழாவை முனைவர் யூசி (தைவான் தமிழ்ச்சங்கத் தலைவர்), விநாயக் செளாஹான் (இந்திய தைபே அசோசியேசனின் துணைப் பொது இயக்குநர்), கெளரி கபூர் (டாடா கன்சல்டன்ஸி தைவான் தலைவர்), ரெவ. வென் லின் வாங் (பூ ஜென் பல்கலைக்கழக துணைத் தலைவர்), ரெவ. ஸ்டானிஸ்லாஸ் இருதயசெல்வம் (பட்டதாரி கல்வி மேம்பாட்டு துறை தலைவர்), அசோகன், *தமிழ்நாடு நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர்), ஆனந்த கிருஷ்ணன் ( துணைத் தலைவர்), லீ (பாக்ஸ்கான் சென்னை நிறுவன பிரதிநிதி) ஆகியோர் பாரம்பரிய குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
ஓவியக் கண்காட்சி
ஆண்டு தோறும் தொடர்ந்து நடத்தப்படும் சிறுவர் சிறுமியர்களுக்கான ஓவியக் கண்காட்சி குறித்த காணொளி திரையிடப்பட்டது. இதில் பங்கேற்ற 18 சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கான ஊக்குவிப்பு பரிசுகள் வழங்கப்பட்டு, அவர்களது படைப்பாற்றலைக் பெருமைபடுத்தினர்.
பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்
இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பாரம்பரியத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் பரதநாட்டியம், குச்சிப்புடி, ஒடிசி, குழந்தைகளின் நடனங்கள், வீணை கலைஞர்களின் இனிமையான இசை, சிறுவர் சிறுமியரின் ஆடை அணிவகுப்பு - பார்வையாளர்களைத் திருப்திப்படுத்தியது. கலைஞர்களின் பாடல்கள், நடனங்கள் - மேடையைத் திகழ்வித்தது. இந்த நிகழ்ச்சிகள் தமிழர் கலாசாரச் செழுமையை உணர்த்தும் வகையில் இருந்தன.
அறிமுக பாலமாக தைவான் தமிழ்ச்சங்கம்
இந்த விழாவில் தைவான் நாட்டினரும், பிற நாட்டு மக்களும் கலந்துகொண்டு தங்களது கலைப்பண்பாடுகளை நிகழ்த்தினார்கள். இது தைவான் தமிழ்ச்சங்கம் இந்தியத் தமிழர் சமூகத்துக்கும், தைவான் மக்களுக்கும் இடையே கலாச்சார பாலமாக செயல்படுகிறது என்பதை உணர்த்துகிறது.
விழாவினை கார்த்திகா சேது, ரெனி அஜய், அருண் ஆகியோர் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சிறப்பாக தொகுத்து வழங்கினர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் சுவைமிக்க அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. தைவான் தமிழ்ச்சங்கப் பொது செயலாளர் முனைவர் ஆ.கு.பிரசன்னன், துணைப் பொது செயலாளர் சு.பொன் முகுந்தன், பொருளாளர் திராஜமோகன் விழாவை ஒருங்கிணைத்தார்கள்.
நிறைவாக தமிழ்ச்சங்கப் பொருளாளர் தங்கராசு அரிச்சந்திரன் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
- நமது செய்தியளர் இரமேஷ் பரமசிவம், துணை தலைவர், தைவான் தமிழ் சங்கம்
Advertisement