
கம்பாலா: உகாண்டாவில் உள்ள உகாசேவா பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் கம்பாலா மாநகரில் லோஹானா பள்ளிக்கூட அரங்கத்தில் நடைபெற்றது.
இணை செயலாளர் மீரான் சலீம் தொகுப்புரை வழங்கினார். இறை மறை வசனத்தை மாணவன் ஹம்ராஸ் ஹமீது ஓதினார். உபதலைவர் எம்மெஸ் சலீம் வரவேற்புரை நிகழ்த்தினார். தலைவர் வாஹிது முகம்மது தலைமை உரையாற்றினார். பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ஜஹபர் சாதிக் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார்.
உகாசேவா மருத்துவமனையின் டிரஸ்டி ஒருங்கிணைப்பாளர் முகம்மது ரயீசுத்தீன் நடப்பு செயல்கள் குறித்து வருடாந்திர உரையாற்றினார்.
தொடர்ந்து 2025_- 2027ஆம் ஆண்டுகளுக்கானா புதிய நிர்வாகிகளை தலைமை தேர்தல் அதிகாரி முகம்மது காஜா மற்றும் இணை தேர்தல் அதிகாரி மீரான் முஹைதீன் அறிவித்தார்கள்.
தலைவர்: எம்மெஸ் சலீம், உபதலைவர்: சாகுல் ஹமீது, பொதுச் செயலாளர்: ஜஹபர் சாதிக், பொருளாளர்: மீரான் சலீம், இணை செயலாளர்: அப்துல் லாஹிர், இணை பொருளாளர்: இர்பான் ஹாமீம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவராக பதவியேற்ற எம்மெஸ் சலீம் ஏற்புரையாற்றினார். முன்னாள் தலைவர் அப்துல் கபூர் புதிய நிர்வாகிகள் அனைவரையும் வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
உகாண்டாவில் பயின்று கடந்த கல்வியாண்டு பொது தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பவுண்டர் முகம்மது யூனுஸ் நன்றியுரையாற்றினார்.
பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என முன்னூற்றி ஐம்பதையும் தாண்டிய எண்ணிக்கையில் மக்கள் கலந்திட்ட நிகழ்வுகள் இரவு விருந்துடன் சிறப்பாக நிறைவுற்றது.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை உகாசேவா நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
- தினமலர் வாசகர் நூருல் தௌபீக்.
Advertisement