/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
"வணக்கம் ஆப்பிரிக்கா இயக்கம்" துவக்கம்
/
"வணக்கம் ஆப்பிரிக்கா இயக்கம்" துவக்கம்

லேகோஸ், நைஜீரியா: மே முதல் நாளான நேற்று ஆப்பிரிக்கா முழுக்க 'வணக்கம்' என்ற சொல்லை ஓங்கி ஒலிக்கச் செய்யும் புதிய முயற்சியாக 'வணக்கம் ஆப்பிரிக்கா இயக்கம்' என்கிற இயக்கத்தை ஆப்ரிக்கா முத்தமிழ்க்கூடம் துவங்கி இருக்கிறது.
இதன் முதல் முயற்சியாக வீட்டில் பணிபுரியும் நைஜீரிய பணிப்பெண்களும், வாகனம் இயக்கும் ஓட்டுநர்களும் 'வணக்கம்' என்ற சொல்லில் இருந்து தங்கள் நாளை துவக்க வைத்திருக்கின்றது.
உலகெங்கும் தமிழ் ஒலிக்க ஆப்பிரிக்காவின் வெவ்வேறு நாடுகளில் உள்ள தமிழ் சமூகத்தினரும், சங்கத்தினரும் முத்தமிழ்க்கூடம் எடுத்த இந்த நன் முயற்சியை பாராட்டி வருகின்றனர். உகாண்டா தமிழ் சங்கம், தென்ஆப்பிரிக்கா தமிழ் சங்கம், மற்றும் தெற்கு சூடானும் தங்கள் ஆதரவை வாட்ஆப் மற்றும் சமூக வளையத்தளங்களிலும் காணொளி பதிவுகளை பரப்பி தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன.
- நமது செய்தியாளர் ஸ்ரீவித்யா ஆனந்தன்
Advertisement