/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
நைஜீரியாவில் தமிழ்ப் புத்தாண்டு
/
நைஜீரியாவில் தமிழ்ப் புத்தாண்டு
நைஜீரியாவில், போர்ட் ஆர் கோட் என்னும் இடத்தில் தமிழ் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது நைஜீரியாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது என்பது பிரபலமான நிகழ்வுக்களில் ஒன்று. கடல் கடந்து பல நாடுகள் கடந்து கொண்டாடப்பட்ட புது ஆரம்பத்தின் திருவிழாவான தமிழ் புத்தாண்டு, இன்ப தாய் மொழியாம் தமிழுக்கும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த திருநாளாகும்.
இது நம் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை நம் மக்களுக்கும் உலக மக்களுக்கும் வெளிப்படுத்திய ஒரு நன்னாளாகும். பல குடும்பங்கள் ஒரு குடும்பமாய் ஒன்று கூடி வாழ்த்துக்களை பகிர்ந்தும், இனிப்புகள் வழங்கியும் அறுசுவை உணவு படைத்தும், தமிழ்புத்தாண்டு மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது இந்த முறையான நிகழ்வின் மூலம் நம் தமிழ் மொழி மற்றும் பரம்பாரியம் வளர்ந்து வரும் என்பதை நினைவில் கொள்கிறோம்.
இந்த வருடம் அனைவருக்கும் சந்தோஷம், சுகம் கொடுக்கவும், எங்கள் தமிழ் மொழியை மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறோம்.
- தினமலர் வாசகர் தினேஷ்குமார் செல்வராஜ்
Advertisement