/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
கென்யா மொம்பாசா தமிழ் சங்கத்தின் 13ஆம் ஆண்டு பொதுக்கூட்டம்
/
கென்யா மொம்பாசா தமிழ் சங்கத்தின் 13ஆம் ஆண்டு பொதுக்கூட்டம்
கென்யா மொம்பாசா தமிழ் சங்கத்தின் 13ஆம் ஆண்டு பொதுக்கூட்டம்
கென்யா மொம்பாசா தமிழ் சங்கத்தின் 13ஆம் ஆண்டு பொதுக்கூட்டம்
செப் 29, 2025

கென்யா மொம்பாசா தமிழ் சங்கத்தின் 13ஆம் ஆண்டு பொதுக்கூட்டம்-------------மொம்பாசா தமிழ் சங்கத்தின் 13ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.09.2025) அன்று டிராவலர்ஸ் பீச் ஹோட்டல் தோட்டத்தில்  நடைபெற்றது.
நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்து  மற்றும் தனிஷ்கா வினோத் குழந்தையின் தெய்வீக கீதம் மூலம் பக்தி உணர்வுடன் துவங்கப்பட்டது. சங்கத் தலைவர் திரு. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். 
 செயலாளர் கவுரி சங்கர் கடந்த ஆண்டின் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார். பொருளாளர் வரதராஜன் நிதி நிலையை  முன்வைத்தார்.
2025-2026ஆம் ஆண்டுக்கான புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை, தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ராமச்சந்திரன் பட்டேல்,  சந்திரசேகர் மற்றும் பரமேஸ்வரன் நடத்தினர்.
 பின்னர், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
புதிய செயற்குழு உறுப்பினர்கள்:•	தலைவர் -  சுப்ரமணியன்•	துணை தலைவர் - ஷாகுல் ஹமீத்•	காரியதரசி -  கவுரி சங்கர்•	துணை செயலாளர் -  ஸ்ரீநிவாசன்•	பொருளாளர் - வரதராஜன்•	துணை பொருளாளர் - பரமேஸ்வரன்•	கலாசார செயலாளர் - கவிதா சந்திரசேகர்•	துணை கலாசார செயலாளர் - ப்ரியா கவுரி சங்கர்•	பொது தொடர்பு அதிகாரி - கிருபா
செயற்குழு உறுப்பினர்கள்:1.	 சந்திரசேகரன்2.	குமரகுரு3.	 சாந்தி சுப்ரமணியன்4.	தீபா குமரகுரு5.	சந்தோஷ்6.	விக்னேஷ்7.	ராம்குமார்
இந்த நிகழ்வில், நீச்சல் , குழந்தைகளுக்கான வண்ண பச்சை குத்துதல், விளையாட்டுகள், வண்ணங்கள் தீட்டுதல்  உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
நிகழ்ச்சியில் இந்திய உணவு பரிமாறப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளையும் சங்க நிர்வாகிகள் திறம்பட செய்ததால், மொம்பாசா தமிழ் சங்கம் மற்ற சங்கங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது.
இந்நிகழ்ச்சி, தமிழ் பண்பாடு, சமூக ஒற்றுமை மற்றும் குடும்ப இணைப்பை வலுப்படுத்தும் விதமாக இனிதே நிறைவுற்றது.
தினமலர் வாசகிதீபா குமரகுரு.
Advertisement

