உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : ஆக 23, 2026 05:19 PM
ADDED : ஆக 22, 2026 05:31 PM

அ நிறம் | அளவு
ஓணம் கொண்டாட்டம் என்றாலே கேரள சேலையும், அடபிரதமன் உடன் சத்யா எனும் விருந்தும்தான் நினைவுக்கு வரும்.
பக்கத்தில் பாலக்காடு இருப்பதாலோ என்னவோ, கோவையில் வசிக்கும் மலையாள மக்களுடன் நம்மில் பலரும் இணைந்து ஓணத்தை கொண்டாடித்தீர்க்கின்றனர்.
இந்தாண்டு ஓணம் கொண்டாட்டத்தில் ஓல்டு டிசைன் நகைகள், பெண்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
கதகளி உருவம் கொண்ட சிவப்பு, பச்சை கற்கள் பதித்த பெரிய நகைகள் அதிகம் விரும்பப்படுகின்றன. ஓணம் சேலையுடன் இவற்றை அணியும் போது அதிக அலங்காரம் இல்லாமலேயே அழகிய தோற்றம் கிடைக்கிறது.
இந்த நகைகளை கல்லூரி, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் ஓணம் கொண்டாட்டங்கள் நடைபெறும் போது, பெண்கள் விரும்பி அணிந்து ஓணம் வந்நல்லா என்று மகிழ்கின்றனர்.
