/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
உங்களால் படிக்க முடியாத 'மிர்தாதின் புத்தகம்'
/
உங்களால் படிக்க முடியாத 'மிர்தாதின் புத்தகம்'
ADDED : ஜூலை 26, 2025 11:47 PM

வா சகர்கள் வாசிக்க வேண்டிய நுால்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் கவிஞர் புவியரசு மொழிபெயர்த்துள்ள, மிகெய்ல் நைமி எழுதிய, 'மிர்தாதின் புத்தகம்' 'The Book of Mirtdad' என்ற நுால் குறித்து, கோவையில் உள்ள 'டெக்னோ பிளாஸ் டிக் சிஸ்டம்' நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகர், தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
மிர்தாதின் புத்தகம் பற்றி சுருக்கமாக எதையும் சொல்லி விட முடியாது. முழுமையாக படித்தால் மட்டுமே இந்த நுாலின் ஆழத்தையும், கனத்தையும் அறிய முடியும். மேலோட்டமாக வாசிக்கும் ஒரு சாதாரண வாசகனால் இந்த புத்தகத்தை படிக்க முடியாது. பொறுமையும், ஒரு ஞானத் தேடலும் இருக்க வேண்டும்.
இந்த புத்தகத்தை எழுதிய மிமிகெய்ல் நைமி, 'இந்த புத்தகத்தை உங்களால் படிக்க முடியாது' என்கிறார். மேலும் அவர், 'நீங்கள் ஞானத்தில் நாட்டம் உள்ளவராக இருந்தால், நீங்கள் படிக்கும் கடைசி புத்தகம் இதுவாகதான் இருக்கும். காரணம் நீங்கள் திரும்பத் திரும்ப இந்த புத்தகத்தையேதான் படித்து கொண்டு இருப்பீர்கள்' என்கிறார்.
அது உண்மைதான். நான் இந்த புத்தகத்தை படித்த பிறகு மறுபடியும், மறுபடியும் படித்துக் கொண்டே இருக்கிறேன். என் நண்பர்கள், 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த நுாலை அன்பளிப்பாக கொடுத்தேன். படித்த அவர்களும் இதைத்தான் சொல்கின்றனர்.
நுாற்றுக்கணக்கான நுால்களை எழுதியவர் ஓஷோ. அவர் படித்து வியந்து எழுதியது நைமியின் மிர்தாதின் புத்தகம்தான். இந்த நுால் பற்றி ஓஷோ கூறும் போது, ''உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது, 'மிர்தாதின் புத்தகம்' தான். இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது. மிகுந்த தனிச்சிறப்புக் கொண்டது. பல்லாயிரம் முறை படிக்க வேண்டிய தகுதி படைத்த புத்தகம். நைமி, இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்றாண்டுகளிலும் இவரே மாபெரும் எழுத்தாளர். நான் ஆயிரக்கணக்கான நுால்கள் படித்திருக்கிறேன், அதில் எதுவும் இதற்கு ஈடாகாது' என்கிறார்.
ஓஷோ எந்த எழுத்தாளரைப் பற்றியும், இப்படி பாராட்டி எழுதியது இல்லை. இந்த நுாலை தமிழில் மிகச் சிறப்பாக மொழிபெயர்த்து இருக்கிறார் கவிஞர் புவியரசு.
அவர் இந்த புத்தகத்தின் மொழிபெயர்ப்பு அனுபவத்தை கூறும் போது, ''இதைவிடக் கடினமான ஒரு புத்தகத்தை மொழி பெயர்க்கும் நிலை, இனி எனக்கு ஏற்படுமா என்பது சந்தேகம்தான். அசுரவேகம், ஆவேசப் பேச்சு, கவிதை வீச்சு, முன்னும் பின்னுமாய்ப் பின்னிப் பின்னி வரும் சிக்கலான வாக்கிய அமைப்புகள், திகைப்பூட்டும் கற்பனை வளம், அகராதிகளைக் கடந்த புதிய சொற்சேர்க்கைகள் எல்லாம் கொண்ட, இந்தத் தத்துவ ஞானப்புயல், கவித்துவ அடைமழையோடு, சூறாவளியாய்ச் சுழன்றடித்து நம்மை மூச்சுத் திணற வைக்கிறது' என்கிறார். ஞானிகள் தேடிய, தேடிக்கொண்டு இருக்கும், 'மிர்தாதின் புத்தகம்' தமிழில் நமக்கு கிடைத்து இருக்கிறது.
வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டும்.
இந்த புத்தகத்தை எழுதிய மிமிகெய்ல் நைமி, 'இந்த புத்தகத்தை உங்களால் படிக்க முடியாது' என்கிறார். மேலும் அவர், 'நீங்கள ஞானத்தில் நாட்டம் உள்ளவராக இருந்தால், நீங்கள் படிக்கும் கடைசி புத்தகம் இதுவாகதான் இருக்கும். காரணம் நீங்கள் திரும்பத் திரும்ப இந்த புத்தகத்தையேதான் படித்து கொண்டு இருப்பீர்கள்' என்கிறார்.