/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
கடலை விடவும் வானத்தை விடவும் அன்புதான் பெரியது
/
கடலை விடவும் வானத்தை விடவும் அன்புதான் பெரியது
ADDED : ஆக 23, 2025 11:56 PM

வாசகர்கள் வாசிக்க வேண்டிய நுால்கள் குறித்து, வாசித்தவர்கள் தாங்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, வாசிப்பு அனுபவங்களை, இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் தீபேஷ் கரிம்புங்கரை எழுதிய, 'பாலைச்சுனை' என்ற கட்டுரை நுால் குறித்து, சன் பவர் டெக்ஸ்டைல்ஸ் முதன்மை செயல் அலுவலர் நாகச்சந்திரன், தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அரேபியாவுக்கு பிழைக்கப்போன ஒரு மனிதனின் துயரக்கதை, 'ஆடு ஜீவிதம்' என்ற பெயரில் புத்தகமாகவும், திரைப்படமாகவும் வந்தது. அந்த படத்தை பார்த்த பிறகு, இரண்டு நாட்களாக என்னால் துாங்க முடியவில்லை. அந்த படத்தை மிஞ்சும் வகையில், இந்த 'பாலைச்சுனை' நுால் எழுதப்பட்டுள்ளது.
இந்த நுால், அமானுல்லா என்பவரின் ஞாபகங்களின் தொகுப்பாக உள்ளது. உண்மை சம்பவங்களின் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட இந்த கட்டுரை நுால், ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதை போல் விவரிக்கப்படுகிறது.
அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், மீண்டு வரமுடியாமல் தவிக்கும் பலரின் கண்ணீர் கதைகளை சொல்கிறது. ஏஜென்ட்களை நம்பி, வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் ஏமாற்றப்பட்டு சிறையிலும், பாலைவனக் காடுகளிலும் சிக்கித் தவிக்கின்றனர்.
உணவும், தண்ணீரும் கிடைக்காமல் பலர் இறந்து போகின்றனர். இப்படி சிக்கிக் கொண்டவர்கள், தங்களை மீட்டுச் செல்ல யாராவது வரமாட்டார்களா?என, கடவுளிடம் மன்றாடுகின்றனர்.
இந்த சூழ்நிலையில்தான் கடவுளால் அனுப்பப்பட்டவர் போல், அமானுல்லா என்ற இரக்கமுள்ள ஒரு மனிதர் வருகிறார்.
வேலைக்காக அரேபியாவுக்கு சென்ற அமானுல்லா, அங்கு ஆதரவற்ற நிலையில் சிக்கித் தவிக்கும் நபர்களை மீட்டு, சொந்த நாடுகளுக்கு அனுப்புகிறார். அவர் சந்தித்த மனிதர்களின் துயரக் கதைகளைதான், இந்த நுாலில் எழுதி இருக்கிறார்.
இளம் வயதில் அரபு நாட்டுக்கு வந்து, முதுமை அடைந்து சொந்த நாடு திரும்ப முடியாத முதியவரின் கதை, 14 ஆண்டுகள் வானத்தை பார்க்காமல், வீட்டுக்குள்ளேயே வாழ்ந்த சிறுமியின் கதை என, 40க்கு மேற்பட்டவர்களின் கதைகள், இந்த நுாலில் உள்ளன.
அன்பு, கடலை விடவும், வானத்தை விடவும் மிகப்பெரியது என, உணர வைக்கிறது அமானுல்லாவின் செயல்.
இந்தப் புத்தகம், மலையாள மொழியில் எழுதப்பட்டு, சுனில் லால் மஞ்சாலும் மூடு என்பவரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இளம் வயதில் அரபு நாட்டுக்கு வந்து, முதுமை அடைந்து சொந்த நாடு திரும்ப முடியாத முதியவரின் கதை, 14 ஆண்டுகள் வானத்தை பார்க்காமல், வீட்டுக்குள்ளேயே வாழ்ந்த சிறுமியின் கதை என, 40க்கு மேற்பட்டவர்களின் கதைகள், இந்த நுாலில் உள்ளன.