பாட்டி காலத்து குரோஷே... இன்ஸ்டா காலத்தில் ‘டிரெண்ட்’
பாட்டி காலத்து குரோஷே... இன்ஸ்டா காலத்தில் ‘டிரெண்ட்’
ADDED : ஆக 22, 2026 01:43 PM

வீட்டு அலங்காரப் பொருட்கள், குழந்தைகளுக்கான உடைகள் என பயன்படுத்திக் கொண்டிருந்த குரோஷே, மீண்டும் ஜென் சி கிட்ஸின் டிரெண்டாக மாறிவிட்டது.
ஹூக் (கொக்கி) மூலம் நுாலை ஒன்றோடு ஒன்றாக இணைத்து தேவைப்படும் வடிவங்களில் பின்னுவது தான் குரோஷே.
இன்ஸ்டாகிராம், யூ–டியூப் ஆகிய சமூக வலைதளங்களில் குரோஷே கைவினைகள் வைரலாகி வரும் நிலையில், இளம் தலைமுறைகளை குரோஷே பக்கம் திருப்பி விட்டுள்ளது.
ஜென் சி கிட்ஸ், வலைதளங்களில் வரும் குரோஷே டூட்டோரியல் வீடியோக்கள் வாயிலாக இதை ஆர்வமாக கற்கின்றனர்.
உடைகள், பைகள், பொம்மைகள், பூங்கொத்துகள், அலங்காரப் பொருட்கள், கீ செயின்கள் போன்றவை குரோஷே வாயிலாக அழகாக உருவாகின்றன.
குரோஷே செய்வது வெறும் பொழுதுப்போக்கு மட்டுமின்றி இப்பொழுது சிறு தொழிலாகவும் மாறிவிட்டது. சமூக வலைதளங்களில் சேல்ஸ் களைகட்டுகிறது.
