தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/படங்களை சுட்டுத்தள்ள அழைக்கிறது 'கோவா 2026'

படங்களை சுட்டுத்தள்ள அழைக்கிறது 'கோவா 2026'

படங்களை சுட்டுத்தள்ள அழைக்கிறது 'கோவா 2026'


ADDED : செப் 27, 2026 11:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 11:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போனில் ஒரு விரலில், சில செகண்டுகளில் தள்ளி விட்டு மனதை சிதைப்பவை அல்ல புகைப்படங்கள். காலத்தால் அழியாத காவியங்களாக, வரலாற்றை திரும்ப சொல்லும் ஓவியங்களாக ஆயிரம் கதை சொல்லுபவை.

இது போன்ற போட்டோக்களின் தனித்துவம் பற்றிய 'கோவா 2026' எனும் கண்காட்சி கோவையில் நடக்கிறது.

மாவட்ட போட்டோகிராபர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் இணைந்து நடத்தும் இக்கண்காட்சி, கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடக் கிறது. அனுமதி இலவசம்.

ஒரு சாதாரண கேமரா முதல் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா வரை புதியதாகவும் பழையதாகவும் இங்குள்ளன.

தனித்துவமிக்க போட்டோ தருணங்களை அப்படியே உறைய வைத்து காவியமாக மாற்ற, நவீன தொழில்நுட்பங்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதை இங்கு காண முடியும். போட்டோக்களை வழுவழுப்பான தாளில் அச்சிட வேண்டுமா... சொர சொர பார்வையில் ரசனை மிகுந்ததாக இருக்க வேண்டுமா என்பதை எல்லாம் இங்கு முடிவு செய்யலாம். விதவிதமான ஆல்பங்களும் உண்டு.

போட்டோகிராபியில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நேரடி செயல் விளக்கம், வீடியோ எடுத்தல், புகைப்படம் எடுத்தல், எடிட் செய்தல், தேர்வு செய்தல், அழகுபடுத்துதல் அதில் உள்ள நுணுக்கங்களும் வகுப்புகளும் சிறப்பு.

புகைப்பட கண்காட்சி அரங்கில் படங்கள் ஒவ்வொன்றும் 'வாவ்' சொல்ல வைக்கின்றன. கண்காட்சி இன்று நிறைவு பெறுவதால், இன்றைய ஞாயிறை இங்கு கழிக்கலாமே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us