/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
திருக்குறளை ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலத்தில் எழுத முயற்சி
/
திருக்குறளை ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலத்தில் எழுத முயற்சி
திருக்குறளை ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலத்தில் எழுத முயற்சி
திருக்குறளை ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலத்தில் எழுத முயற்சி
ADDED : ஆக 23, 2025 11:52 PM

கோ வை, ரத்தினபுரி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் ஜெர்ஷ்னி, தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும், திருக்குறளை மனப்பாடமாக சொல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அது மட்டுமா...ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திருக்குறளை எழுதும், அரிய சாதனையில் இறங்கியுள்ளார்.
''எல்.கே.ஜி. படிக்கும் போதே, கிளாஸ் டீச்சர் தினமும் வகுப்பு தொடங்கும் முன் திருக்குறளை சொல்ல சொல்வார். அப்போது முதல் திருக்குறளைப் படிக்கத் தொடங்கினேன்.
1ம்வகுப்பு முதல் ஆசிரியர் மெர்சிபா ஜாஸ்மின், விரைவாக ஒப்பிவிக்க பயிற்சி அளித்தார். தற்போது, 50 நிமிடத்தில் 1,330 திருக்குறளை சொல்கிறேன். இன்னும் விரைவாக ஒப்புவிக்க பயிற்சி எடுத்து வருகிறேன்.
எந்த அதிகாரத்தில் இருந்தும் அல்லது வரிசை எண் படி கேட்டாலும், திருக்குறளை சொல்லவும், பிழையின்றி எழுதவும், ஆசிரியர் பயிற்சி அளித்து வருகிறார்.
அம்மா, அப்பா ஊக்குவிப்பால், ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரண்டு கைகளாலும் திருக்குறளை எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். நிச்சயம் சாதனை படைப்பேன்,''
நீங்க சாதிப்பீங்க ஜெர்ஷ்னி!