PUBLISHED ON : பிப் 24, 2025 12:00 AM


2025 மார்ச் 3ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஅ) கால்பந்து போட்டியில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சென்னையின் எஃப்.சி. அணியை 3--0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


சென்னையின் எஃப்.சி. அணியின் பயிற்சியாளர், 'இந்த தோல்வி நிச்சயமாக ஏமாற்றம் அளிக்கிறது, ஆனால் இது அணியின் வளர்ச்சிக்கு ஒரு பாடமாக இருக்கும்' என்று கூறினார்.
இந்த வெற்றி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் பிளேஆஃப் வாய்ப்புகளை அதிகரித்துள்ளது, மேலும் சென்னையின் எஃப்.சி. அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.
போட்டி ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இருந்தது போட்டியைக் காண நிறைய சிறுவர்கள் மைதானதிற்கு வெளியே நின்று கொண்டிருந்தனர் ஆனால் அவர்களிடம் குறைந்த பட்ச டிக்கெட் வாங்கக்கூட வசதி இல்லாததால் போட்டியைப் பார்க்க போகிறவர்களை நிறுத்தி அண்ணா..என்னையும் கூட்டிட்டு போகமுடியுமா? என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இத்தனைக்கும் மைதானத்தினுள் பெரும்பாலான பார்வையாளர்கள் காலரி காலியாகவே இருந்தது ஆர்வமுள்ள மாணவர்களை இலவசமாக அனுமதித்தால்தானே அவர்கள் எதிர்காலத்தில் விளையாட்டு வீரர்களாக முடியும்.
-எல்.முருகராஜ்.

