தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பொக்கிஷம்/மும்பையின் பிரம்மாண்ட விநாயகர் கரைப்பு ஊர்வலம்!

மும்பையின் பிரம்மாண்ட விநாயகர் கரைப்பு ஊர்வலம்!

மும்பையின் பிரம்மாண்ட விநாயகர் கரைப்பு ஊர்வலம்!


PUBLISHED ON : செப் 25, 2026 07:14 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 25, 2026 07:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கி 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட பிறகு, 11-வது நாளான அனந்த சதுர்த்தசி அன்று விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.Image 1622946மற்ற ஊர்களில் எப்படியோ, ஆனால் மும்பையில் இந்த வழக்கத்தை மிகவும் பிரம்மாண்டமாகக் கடைப்பிடிக்கின்றனர். மும்பையைப் பொறுத்தவரை விநாயகர் சிலை கரைப்புத் திருவிழா என்பது வெறும் ஒரு மதச் சடங்கு மட்டுமல்ல; அது மும்பை நகரத்தின் மிகப்பெரிய பண்பாட்டு மற்றும் மக்கள் திருவிழாவாகவே கருதப்படுகிறது.

லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு, ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான விநாயகர் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு செல்வார்கள். லால்பாக்சா ராஜா, கணேஷ்கல்லி, ராஜா தேஜுகாயா போன்ற புகழ்பெற்ற பெரிய விநாயகர் சிலைகளின் ஊர்வலம் மட்டுமே 18 முதல் 24 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியாக நடைபெறும்.Image 1622947-ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத் தியாகி பால கங்காதர திலகர், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து இந்திய மக்களை ஒன்று திரட்டுவதற்காக இந்த விநாயகர் ஊர்வலப் பொதுக் கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து இன்று வரை, சாதி, மத, பொருளாதார வேறுபாடுகளைத் தாண்டி மும்பை மக்கள் அனைவரும் ஒன்று கூடும் ஒரே பிரம்மாண்ட நிகழ்வாக இது திகழ்கிறது.

இந்த நிகழ்வு இன்று வெகு விமரிசையாகவே நடைபெற்றது!

விண்ணைப் பிளக்கும் 'நாசிக் டோல்' முரசு வாத்தியங்களின் அதிரடி, தெருவெங்கும் சிந்திக்கிடக்கும் ஆரஞ்சு நிற 'குலால்' பொடிகள், பல்லாயிரக்கணக்கான மக்களின் கரகோஷங்கள் என ஒட்டுமொத்த மும்பை மாநகரமும் இன்று ஒரு பிரம்மாண்ட விழாக்களமாக மாறியிருந்தது. 10 நாட்கள் தங்களின் அன்பு இல்லங்களிலும், விதவிதமான அலங்காரப் பந்தல்களிலும் வீற்றிருந்து அருள்பாலித்த 'கணபதி பாப்பா'வை வழியனுப்பி வைக்கும் அனந்த சதுர்த்தசி கரைப்பு ஊர்வலம் வெகு சிறப்பாக இருந்தது.

'கணபதி பாப்பா மோரியா... புடுச்யா வர்ஷி லவ்கர் யா!' (விநாயகப் பெருமானே, அடுத்த ஆண்டும் சீக்கிரம் வாருங்கள்!) என்ற லட்சக்கணக்கான பக்தர்களின் உணர்ச்சிப்பூர்வமான குரல் வானதிர முழங்கியது.Image 1622948மும்பையின் முடிசூடா மன்னனான 'லால்பாக்சா ராஜா' தன் பந்தலில் இருந்து புறப்பட்டு வீதியில் இறங்கிய அந்த மகத்தான காட்சி அற்புதம்! பல அடி உயர பிரம்மாண்ட விநாயகரின் உருவம் மெல்ல நகர்ந்து வரும்போது, சுற்றியுள்ள கட்டிடங்களின் பால்கனிகளிலிருந்தும், கூரைகளிலிருந்தும் பூ மழை பொழியப்பட்டது.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த 24,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு வளையமிட்டுள்ளனர். ஆனாலும், பாப்பாவின் ஒரு பார்வையைப் பெற அலைகடலெனத் திரண்டிருக்கும் இந்த மக்கள் பெருவெள்ளத்திற்கு முன்னால் கட்டுப்பாடுகள் அனைத்தும் பக்தியின் வசப்பட்டு நிற்கின்றன!

தெருவின் ஒவ்வொரு முனையிலும் 'தாஷா-டோல்' வாத்தியக் குழுவினர் பாரம்பரிய உடையணிந்து கம்பீரமாக நிற்பதைக் காண முடிந்தது. அந்த முரசுகளின் கம்பீர அதிர்வுக்கு ஏற்ப, வயது வித்தியாசமின்றி இளைஞர்கள், பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் வீதியில் இறங்கி வண்ணப் பொடிகளைத் தூவி ஆட்டம் ஆடினர்.

ஊர்வலத்தின் இறுதி இலக்கான சௌபாட்டி கடற்கரையை நோக்கி பல்லாயிரக்கணக்கான சிலைகள் அணிவகுத்தன. அரபிக்கடலின் அலைகள் கரை தொட்டு ஆர்ப்பரிக்கும் இந்த மாலையில், அஸ்தமனச் சூரியனின் பொன்னிற வெளிச்சத்தில் பிரம்மாண்ட உருவங்கள் நீரில் இறங்கி கரைந்த காட்சி நெஞ்சை நெகிழ வைத்தது.

-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us