PUBLISHED ON : டிச 22, 2025 03:31 PM

பூமியின் தென்கோடியில் அமைந்துள்ள அண்டார்டிகா, உலகின் ஐந்தாவது பெரிய கண்டமாகும். இந்தியாவை விட நான்கு மடங்கு பெரிய நிலப்பரப்பைக் கொண்ட இந்தக் கண்டம், 98% பனியால் மூடப்பட்டுள்ளது. மனிதர்கள் நிரந்தரமாக வசிக்காத ஒரே கண்டம் இதுதான்.


அண்டார்டிகா ஒப்பந்தத்தின்படி, இந்தக் கண்டம் எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தமானது அல்ல; இது அமைதிக்கும் அறிவியலுக்குமான இடம். இந்தியா இங்கு மைத்ரி மற்றும் பாரதி ஆகிய இரண்டு நவீன ஆராய்ச்சி நிலையங்களைச் செயல்படுத்தி வருகிறது. இங்கு தங்கியிருக்கும் விஞ்ஞானிகள் பருவமழை மற்றும் புவி காந்தப்புலம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்கின்றனர்.

அண்டார்டிகா என்பது வெறும் பனிக்கட்டி அல்ல; அது பூமியின் தட்பவெப்ப நிலையைச் சமன்படுத்தும் ஒரு இதயம் போன்றது. அந்த வெண்ணிற உலகத்தைப் பாதுகாப்பது என்பது நம் எதிர்காலத் தலைமுறையின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதாகும்.
-எல்.முருகராஜ்

