sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : செப் 09, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

01. மத்திய அரசுக்குச் சட்ட ஆலோசனை வழங்குவதற்காகச் செயல்படும் சட்ட கமிஷனின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், எத்தனையாவது புதிய சட்டக் கமிஷன் அமைப்பதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டு உள்ளது?

அ. 20

ஆ. 22

இ. 15

ஈ. 23



02. பெட்ரோலில் எத்தனாலைக் கலக்கும் திட்டத்தால், 2014ஆம் ஆண்டு முதல் இதுவரை, எவ்வளவு கோடி ரூபாய் அன்னிய செலாவணி மிச்சப்படுத்தப்பட்டு உள்ளதாக, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்?


அ. ரூ.55,000 கோடி

ஆ. ரூ. 99,000 கோடி

இ. ரூ.80,000 கோடி

ஈ. ரூ. 15,000 கோடி

03. சமூக வலைதளங்களை நிர்வகிப்பதற்காக, இந்தியாவின் எந்த மாநில முதல்வர் அலுவலகம், மாதந்தோறும் ரூ.53 லட்சம் செலவு செய்வதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது?

அ. கர்நாடகம்

ஆ. தமிழகம்

இ. அசாம்

ஈ. பீஹார்

04. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து, நடப்பு நிதியாண்டில், 6.60 சதவீத வளர்ச்சி ஏற்படும் என்று உலக வங்கி கணித்திருந்த நிலையில், அதைத் தற்போது எத்தனை சதவீதமாக உயர்த்தியுள்ளது?

அ. 8

ஆ. 6.75

இ. 7

ஈ. 7.75

05. மற்ற கட்சிக்குத் தாவி தகுதி நீக்கம் செய்யப்படும் எம்.எல்.ஏ.க்களுக்கு, ஓய்வூதியத்தை ரத்து செய்யும் மசோதா, எந்த மாநில சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது?

அ. தெலங்கானா

ஆ. மேற்குவங்கம்

இ. ஹரியாணா

ஈ. ஹிமாச்சலபிரதேசம்

06. இந்தியாவில், சி.பி.ஐ. விசாரிக்கும் 6,903 ஊழல் வழக்குகள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில், இவற்றில் எத்தனை வழக்குகள், 20 ஆண்டுகளாக விசாரணையில் உள்ளதாக, மத்திய விஜிலென்ஸ் கமிஷன் தெரிவித்துள்ளது?

அ. 460

ஆ. 361

இ. 501

ஈ. 653



07. பாரிஸில் நடந்த பாராலிம்பிக் போட்டியில், வில்வித்தையில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்துள்ளவர்?


அ. ஹர்விந்தர் சிங்

ஆ. ஹர்கிஷன் சிங்

இ. அனில் ருத்வா

ஈ. முகேஷ்

8. பெங்களூரில் நடந்த, தேசிய தடகளம் 400 மீ. பெண்கள் தடை ஓட்டத்தை, 56.23 வினாடிகளில் கடந்து, 39 ஆண்டுகால பி.டி.உஷாவின் சாதனையை (56.80) முறியடித்துள்ள, தமிழக வீராங்கனை யார்?

அ. ப்ரியா

ஆ. கவிதா

இ. வித்யா

ஈ. ஸ்வேதா

விடைகள்: 1.ஈ, 2. ஆ, 3. அ, 4. இ, 5. ஈ, 6. ஆ, 7. அ, 8. இ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us