PUBLISHED ON : அக் 27, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்பு தனது காரில் சென்னை டூ புதுச்சேரி பயணம் செய்தார்.
நெடுஞ்சாலை வழியாக 50 கி.மீ. தூரத்தை, மணிக்கு 100 கி.மீ. என்ற சீரான வேகத்திலும்;
கிராம சாலைகள் வழியாக 100 கி.மீ. தூரத்தை, மணிக்கு 50 கி.மீ. என்ற வேகத்திலும் பயணம் மேற்கொண்டார்.
எனில், அவரது பயணத்தின் சராசரி வேகம் என்ன?
அ) 60 கி.மீ./மணி
ஆ) 67 கி.மீ./மணி
இ) 70 கி.மீ./மணி
ஈ) 75 கி.மீ./மணி
விடைகள்:
அ) 60 கி.மீ./மணி
விளக்கம்:
நமக்கு வேகத்தின் சூத்திரம் தெரியும். அதாவது,
வேகம்(S) = தூரம்(D) / நேரம்(T)
இதனை, நேரம் = தூரம்/வேகம் என்றும் எழுதலாம்.
நெடுஞ்சாலை வழியாக:
T1 = 50/100 = 1/2 மணி நேரம்
கிராம சாலை வழியாக:
T2 = 100/50 = 2 மணி நேரம்
பயணத்தின் சராசரி வேகம்
= (D1+D2)/(T1+T2)
= (50+100)/(1/2+2) = 150/2.5
= 60 கி.மீ./மணி.

