
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. தமிழக அரசு பல்வேறு பெயர்களை மாற்றி வரும் நிலையில், பொது கட்டட விதிகளில், 'நில வகைப்பாடு மாற்றம்' என்ற தலைப்பை எப்படித் திருத்தி உள்ளது?
அ. நில அளவை மாற்றம்
ஆ. நில உபயோக மாற்றம்
இ. நில பயன்பாடு மாற்றம்
ஈ. நில உரிமை மாற்றம்
2. சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய, 'சோலார்' பம்புகளை அமைப்பதற்கான மானியத்தை, விவசாயிகள் பயனடையும் வகையில், 40 சதவீதத்தில் இருந்து 90 சதவீதமாக, எந்த மாநில அரசு அதிகரித்துள்ளது?
அ. மேற்குவங்கம்
ஆ. மத்தியப் பிரதேசம்
இ. சட்டீஸ்கர்
ஈ. அருணாச்சலப் பிரதேசம்
3. மேற்காசிய நாடான எங்கு, 75 ஆண்டுகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்த, 'கபாலா' (வெளிநாட்டுத் தொழிலாளர்களை நிர்வகிக்கும் சட்டமுறை) என்ற தொழிலாளர் நடைமுறை, முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது?
அ. ஜோர்டான்
ஆ. குவைத்
இ. சௌதி அரேபியா
ஈ. லெபனான்
4. நம் அண்டை நாடான எங்கு, பேரிடரால் பாதிக்கப்பட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு, இந்தியா சார்பில் சமீபத்தில், 81 பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளன?
அ. நேபாளம்
ஆ. பூட்டான்
இ. வங்கதேசம்
ஈ. மியான்மர்
5. இந்தியா முழுவதும், புதிதாக எத்தனை மருத்துவக் கல்லூரிகளுக்கு, தேசிய மருத்துவ கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது?
அ. 50
ஆ. 35
இ. 22
ஈ. 41
6. வியட்நாமில் நடந்த ஆசியப் படகு சாம்பியன்ஷிப் போட்டியில், 3 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என, முதன்முறையாக 10 பதக்கங்களை வென்று, எந்த அணி சாதனைப் படைத்துள்ளது?
அ. இலங்கை
ஆ. இந்தியா
இ. பாகிஸ்தான்
ஈ. சுவிட்சர்லாந்து
விடைகள்: 1. ஆ, 2. ஆ, 3. இ, 4. அ, 5. ஈ, 6. ஆ.

