
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. தென்கிழக்கு ஆசிய நாடுகளான, எந்த இரு நாடுகளுக்கு இடையே, நீண்ட காலமாக நிலவி வரும் எல்லைப் பிரச்னை தொடர்பாக, சமீபத்தில் மோதல் வலுத்தது?
அ. இந்தோனேசியா - மலேசியா
ஆ. தாய்லாந்து - கம்போடியா
இ. மலேசியா - தாய்லாந்து
ஈ. இந்தோனேசியா - கம்போடியா
2. இஸ்ரோவில் இருந்து இந்த ஆண்டு, எத்தனை ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட உள்ளதாக, அதன் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்?
அ. 20
ஆ. 10
இ. 8
ஈ. 12
3. நாட்டின் பிரதமராக அதிக நாட்கள் (4,078) தொடர்ச்சியாக இருந்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ள நரேந்திர மோடி, இதற்கு முன்பு பிரதமராக இருந்த யாரின் சாதனையை (4,077) முறியடித்துள்ளார்?
அ. வாஜ்பாய்
ஆ. மன்மோகன் சிங்
இ. இந்திரா காந்தி
ஈ. நரசிம்மராவ்
4. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு, எத்தனை சதவீதம் வரி விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்துள்ளார்?
அ. 50
ஆ. 25
இ. 15
ஈ. 30
5. இந்தியாவின் முதல் தானியங்கி துறைமுகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது?
அ. விழிஞம் துறைமுகம்
ஆ. சென்னை துறைமுகம்
இ. கொச்சி துறைமுகம்
ஈ. விசாகப்பட்டினம் துறைமுகம்
6. கிரீசில் நடந்த உலக மல்யுத்த ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில், 110 கிலோ பிரிவில் தங்கம் வென்றதுடன், உலக சாம்பியன்ஷிப் ஹெவிவெயிட் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளவர்?
அ. மோஹித்
ஆ. சுமித் தலால்
இ. ஹர்தீப்
ஈ. சன்தீப்
விடைகள்:
1. ஆ,
2. ஈ,
3. இ,
4. ஆ,
5. அ,
6. இ.

