PUBLISHED ON : ஆக 08, 2026 09:50 PM

வெளவால்கள் இயற்கையின் மிக விசித்திரமான மற்றும் முக்கியமான உயிரினங்களில் ஒன்றாகும். பாலூட்டிகளில் பறக்கும் திறன் கொண்ட ஒரே உயிரினம் இவைதான்.



இவ்வாறாக, உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சமநிலையில் வைத்திருப்பதில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இருப்பினும், மனிதர்களின் ஆக்கிரமிப்புகள், காலநிலை மாற்றம் மற்றும் தவறான புரிதல்கள் காரணமாக இந்த அமைதியான உயிரினங்கள் இன்று பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன.
இந்தச் சூழலில், இத்தாலியின் ரோம் நகரில் செயல்படும் 'டுடெல்லா பிபிஸ்ட்ரெல்லி' எனப்படும் இத்தாலிய வௌவால் பாதுகாப்புச் சங்கம், இடம்பெயர்ந்த, காயமடைந்த அல்லது வாழ்விடங்களை இழந்த வெளவால்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடத்தையும் மறுவாழ்வையும் வழங்கி வருகிறது. மனிதர்களின் தலையீடுகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயரும் அல்லது காயமடையும் வெளவால்களைத் தொண்டு நிறுவனங்களும் அறிவியலாளர்களும் மீட்டுப் பாதுகாக்கின்றனர். காயமடைந்த வெளவால்களுக்குப் பாதுகாப்பான அடைக்கலம் அளித்து, அவற்றுக்கு மறுவாழ்வு வழங்கி மீண்டும் இயற்கையான காடுகளில் விடும் பணியைச் செய்து வருகின்றனர்.
வெளவால்களுக்கு எதிராக உலகமே திரண்டு நின்றாலும், அவற்றுக்கு ஆதரவாகச் சில நல்ல உள்ளங்கள் இயங்குவது சற்று ஆறுதலைத் தருகிறது.
-எல்.முருகராஜ்
