
என் நெஞ்சிற்கினிய தோழியே...
அருவமாய் நம்மோடு உலவும் நம் அன்பிற்குரியவர்களை உருவமாய் மாற்றித்தரும் ஓர் முகவரியை அறிந்தேன். உன்னோடு அதனை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
செராமிக், பிளாஸ்டிக், ரெசின் வகையிலான இச்சிலைகளை தொழில்நுட்பத்தின் வழியே தத்ரூபமாய் செதுக்குகிறது சென்னை, வானகரம் '3டி செல்பி' நிறுவனம். செராமிக்கில் ஐந்து முதல் எட்டு அங்குலம் வரையிலான மார்பளவு சிலைகளையும், ரூ.4,500 பட்ஜெட்டில் மூன்று அங்குல மினியேச்சர் சிலைகளையும் இங்கே தயாரிக்கின்றனர்!
குறைவான தரத்திலான கறுப்பு வெள்ளை புகைப்படமாயினும், அதை டிஜிட்டலில் மெருகேற்றி சிலையை உருவாக்கி விடுகின்றனர். சிலைகளை மரம், அக்ரலிக், பிளாஸ்டிக் அடித்தளத்தில் பதித்து பெயர் பொறித்து தருகின்றனர். இவர்களது தயாரிப்பில் மெழுகு சிலைக்கு ஈடுகொடுக்கிறது ஆறடி உயர நெகிழி சிலை.
எடை குறைவென்பதும், முறையான பராமரிப்பில் 10 ஆண்டு கால ஆயுள் கொண்டிருப்பதும் இச்சிலைகளுக்கான சிறப்பு. இப்படியானவை தவிர, பொக்கிஷமாய் நீ பாதுகாக்க விரும்பும் வாழ்வின் தருணங்களையும் 'ரெசின்' சிலைகளாக்கி தருவது இவர்களது தனிச்சிறப்பு!
இனியவளே... இவற்றோடு, நீ விரும்பும் எது போலவும் சிலை பெறலாம்; இரு வாரங்களுக்கு முன் ஆர்டர் செய்வது மட்டும் அவசியம்.
காதலுடன்... கண்ணம்மா.
79000 60025