sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

கண்ணம்மா

/

நிழல் பேசும் நிஜம்

/

மஜிலி (தெலுங்கு)

/

மஜிலி (தெலுங்கு)

மஜிலி (தெலுங்கு)

மஜிலி (தெலுங்கு)


PUBLISHED ON : ஆக 04, 2019

Google News

PUBLISHED ON : ஆக 04, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு பெண்ணோட காதல் என்ன செய்யும்?

பூர்ணா, என் மனசுக்கு பிடிச்சவன். அவன் மனசுக்கு பிடிச்சதோ... கிரிக்கெட்டும் அன்ஸுவும் தான்! ஆனா, அவங்க காதலை அன்ஸுவோட குடும்பம் ஏத்துக்க மறுத்தது.

பூர்ணா கிரிக்கெட்டை மறந்தான்; குடிக்க ஆரம்பிச்சான்; தெருவுல விழுந்து கிடந்தான். என் கண் முன்னாடி அவன் வாழ்க்கை புதைகுழியில மூழ்கிட்டிருந்த சமயத்துல, என் அப்பாகிட்ட சொன்னேன்...

'நான் பூர்ணாவை கல்யாணம் பண்ணிக்கிறேன்ப்பா!'

கல்யாணம் நடந்தது. ஆனா, அதுக்கப்புறமும்... பூர்ணா மனசு முழுக்க அன்ஸு!

இறந்து போன அன்ஸுவோட மகள் மீரா ரூபத்துல காலம் எனக்கொரு வாய்ப்பை கொடுத்தது. மீராவை மகளா நான் தத்தெடுத்துக்கிட்டது, பூர்ணாவுக்கு சில விஷயங்களை அழுத்தமா உணர்த்துச்சு.

'நான் அன்ஸுவையே நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா நீ, அவ மகளை நம்மோட மகளாக்கி நான் உனக்கு எவ்வளவு முக்கியம்னு எனக்கு உணர்த்திட்டே! இத்தனை நாளா, கண்ணுக்கு முன்னால காதல் இருந்தும், அதை கடந்த காலத்துல தேடிட்டு இருந்துட்டேன்; என்னை மன்னிச்சிடு ஷ்ரவாணி'ன்னு, என் முகத்தை தன் கையில ஏந்தி அழுதான் பூர்ணா.

ஒரு பெண்ணோட காதல், எந்த புதைகுழியில இருந்தும் ஒரு ஆண்மகனை மீட்டெடுக்கும்.






      Dinamalar
      Follow us