/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
கட்டடத்தின் வெளிப்புறத்தில் இ.டபிள்யு.சி., பேனல்களை பயன்படுத்துவது ஏன்?
/
கட்டடத்தின் வெளிப்புறத்தில் இ.டபிள்யு.சி., பேனல்களை பயன்படுத்துவது ஏன்?
கட்டடத்தின் வெளிப்புறத்தில் இ.டபிள்யு.சி., பேனல்களை பயன்படுத்துவது ஏன்?
கட்டடத்தின் வெளிப்புறத்தில் இ.டபிள்யு.சி., பேனல்களை பயன்படுத்துவது ஏன்?
ADDED : ஆக 09, 2025 06:41 AM

ச மீப காலமாக வீடு கட்டுவோர், அதில் வெளிப்புற அலங்கார விஷயங்ளில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். இந்த விஷயத்தில் நீண்டகாலமாக கான்கிரீட் வாயிலாக தயாரிக்கப்படும் பாகங்களையே பெரும்பாலான மக்கள் கட்டடத்தின் வெளிப்புற அலங்கார பணிகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதில் கட்டடத்தில் வெளிப்புற அலங்காரம் செய்வதில் அதற்கான பாகங்களை எப்படி தயாரிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறை களில், மக்கள் விழிப்பு டன் செயல்பட வேண்டும். குறிப்பாக, ஒரு கட்டடம் கட்டும் போது அதில் வெளிப்புற தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் பல்வேறு வழிமுறைகளை மக்கள் தேடுகின்றனர்.
இந்த விஷயத்தில், கட்டடத்தின் வெளிப்புற தோற்றத்தை வடிவமைக்க மக்கள் பல்வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான இடங்களில் கட்டடத்தின் வெளிப்புற தோற்றத்துக்கான வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய 3டி முறையை மக்கள் ஆர்வத்துடன் பயன் படுத்துகின்றனர்.
இதன்படி, 3டி முறையில் கட்டடங்களின் தோற்றத்தை வடிவமைக்கும் போது அதில், அதிக சிக்கல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள மக்கள் ஆர்வாக செயல்படுகின்றனர். இதில் கான்கிரீட் பாகங்களுக்கு அப்பால், கிரில் கம்பிகளை பயன்படுத்துவதும் சமீப காலமாக அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.
இந்த விஷயத்தில் பாதுகாப்பு காரணங்கள் அடிப்படையில், எடை குறைந்த பொருட்களை எப்படி தேர்வு செய்து பயன்படுத்துவது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இந்நிலையில், எடை குறைந்த அதே நேரம், மழை, வெயில் போன்ற காரணங்களால் பாதிக்கப் படாமல் இருக்கக் கூடிய பொருட்களை பயன் படுத்த வேண்டும்.
தனி வீடுகள் மட்டுமல்லாது, அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என பல்வேறு வகை கட்டடங்களிலும் வெளிப்புற அலங்காரம் தற்போது அத்தியாவசியமானதாக உள்ளது. இந்த சூழலில் பயன்பாட்டில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத பொருட்களை பயன் படுத்த வேண்டும் என்பது அவசியமாகிறது.
இதற்கு சிறந்த தேர்வாக, எக்ஸ்டீரியர் வால் கிளாடிங்க்' எனப்படும் இ. டபிள்யு.சி., பேனல்களை பயன்படுத்துவது தற்போது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிக வெப்பம், தொடர் மழை போன்ற பல்வேறு பாதிப்புகளையும் தாங்கும் வகையில் இந்த பேனல்கள் அமைந்து இருப்பது கூடுதல் சிறப்பு.
புதிய கட்டடங்களை கட்டும்போது என்று மட்டுமல்லாது, பழைய கட்டடங்களை புதுப்பிக்கும் பணியிலும், இது போன்ற பேனல்களை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இயற்கை காரணங் களால் இயல்பாக ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை தாங்கி நிற்கும் என்பதுடன், நீடித்து உழைக்கும், பட் ஜெட்டுக்குள் அடங்கும் போன்ற சிறப்புகள் இதற்கு உண்டு என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.