/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
மேல்தள '‛ஸ்லாப்' பணிக்கான வழிமுறைகளை புரிந்து செயல்படுங்கள்!
/
மேல்தள '‛ஸ்லாப்' பணிக்கான வழிமுறைகளை புரிந்து செயல்படுங்கள்!
மேல்தள '‛ஸ்லாப்' பணிக்கான வழிமுறைகளை புரிந்து செயல்படுங்கள்!
மேல்தள '‛ஸ்லாப்' பணிக்கான வழிமுறைகளை புரிந்து செயல்படுங்கள்!
ADDED : பிப் 07, 2026 08:10 AM

புதிதாக வீடு கட்டும் போது அதன் ஒவ்வொரு பாகமும் உறுதியாக இருக்க வேண்டும் என்றால், அதற்கான சரியான வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும். இது விஷயத்தில் தொழில்நுட்ப ரீதியாக அடிப்படை விஷயங்களை உரிமையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்காக வீட்டு உரிமையாளர்கள், ஒவ்வொருவரும் கட்டுமான பொறியாளர் அளவுக்கு படித்து அறிய வேண்டும் என்ற பொருள் இல்லை. அதே நேரம் கட்டடத்தின் ஒவ்வொரு பாகத்துக்கான பணிகள் தொடர்பான அடிப்படை வழி முறைகளை அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
கட்டடங்களில் மேல் தளத்துக்கான கான்கிரீட் ஸ்லாப் அமைப்பதற்கான பணிகளை மிக துல்லியமாக கவனிக்க வேண்டும். உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியில் ரூப் ஸ்லாப் அமைப்பதில் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை ஒரு பட்டியலாக போட்டுக் கொள்ளுங்கள்.
இதில் அடிப்படையாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னவென்றால், ரூப் ஸ்லாப் அமையும் உயரம், அதன் தடிமன் என்னவாக இருக்க வேண்டும் என்று பாருங்கள். இதற்கான கம்பி கூடுகள் அமைப்பது, சென்ட்ரிங் வேலை ஆகியவற்றில் கவனமாக இருந்தால் ஸ்லாப் தடிமன் சரியான அளவில் இருப்பதை உறுதி செய்யலாம்.
பொதுவாக ஒரு கட்டடம் கட்டும் போது அதன் தரை மட்டம் எது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அந்த தரை மட்டத்தில் இருந்து, 10 அல்லது, 11 அடி உயரத்தில் மேல் தளத்துக்கான ரூப் ஸ்லாப்பின் அடிப்பக்கம் அமைவதை உறுதி செய்தால் கட்டடத்தை பயன்படுத்தும் போது பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.
இதற்கு அடுத்தபடியாக ரூப் ஸ்லாப்பின் தடிமன் என்னவாக இருக்க வேண்டும் என்பதை சென்ட்ரிங் பணி நிலையிலேயே உறுதிபடுத்த வேண்டும். சென்ட்ரிங் பணியின் போது, தாங்கு பலகைகள் அமைத்து அதன் மேல் கம்பி கூடுகள் வைக்கும் போது எவ்வளவு உயரத்துக்கு கான்கிரீட் கலவை கொட்ட வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்.
பொதுவாக, இந்த பணிகளை சென்ட்ரிங் வேலைக்கு வருவோர் சரியாக செய்கிறார்களா என்பதை பொறியாளர்கள் தான் உறுதி செய்ய வேண்டும். கட்டுமான பணியை ஒப்படைக்கும் போது மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தில் இந்த விஷயங்களை குறிப்பிட வேண்டும்.
மேல் தளத்துக்கான கான்கிரீட் போடுவதற்கு முன்னும், பின்னும் இந்த விபரங்களை உரிமையாளர்கள் நேரடியாக அல்லது அவரது சார்பில் வேறு ஒருவர் கண்காணிக்க வேண்டும். இதில் எந்த அளவுக்கு துல்லிய தன்மை உறுதி செய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு கட்டடத்தின் உறுதி தன்மை பாதுகாக்கப்படும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
கட்டடத்தின் ரூப் ஸ்லாப் அமையும் உயரம், அதன் தடிமன் என்னவாக இருக்க வேண்டும் என்பதிலும், அதற்கான கம்பி கூடுகள் அமைப்பது, சென்ட்ரிங் வேலை ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.

