/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
மனையில் பக்க அளவுகளை துல்லியமாக சரிபார்ப்பதில் கவனிக்க வேண்டியவை!
/
மனையில் பக்க அளவுகளை துல்லியமாக சரிபார்ப்பதில் கவனிக்க வேண்டியவை!
மனையில் பக்க அளவுகளை துல்லியமாக சரிபார்ப்பதில் கவனிக்க வேண்டியவை!
மனையில் பக்க அளவுகளை துல்லியமாக சரிபார்ப்பதில் கவனிக்க வேண்டியவை!
ADDED : பிப் 03, 2024 09:27 AM

வீடு கட்டுவதற்காக மனை வாங்குவோர், தனி வீடு வாங்குவோர், நிலத்தின் அளவுகள் விஷயத்தில் மிக தெளிவாக இருக்க வேண்டும். இதில் சில குளறுபடிகள் நமக்கு தெரியாமல் போய்விடுகின்றன. சொத்து விற்பனையில் பத்திரத்தில் அதன் அளவுகள் தெளிவாக குறிப்பிடப்படும். இந்த வழக்கத்தை அனைவரும் சரியாக கடைப்பிடிக்கின்றனர் என்று பொதுவாக நம்புகிறோம்.
உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட நிலம் தொடர்பான பத்திரத்தில், அதன் நான்கு திசைகளின் அளவுகள் குறிப்பிடப்படும். அதாவது, கிழக்கில், மேற்கில், வடக்கில், தெற்கில் என நான்கு பக்க அளவுகள் குறிப்பிடப்படுகின்றன.
இந்த அளவுகள் அடி கணக்கில் குறிப்பிடப்படுவதே குழப்பங்களை தவிர்க்க உதவும். இவ்வாறு குறிப்பிடப்படும் அளவுகள் துல்லியமானதாக இருப்பதில்லை. குறிப்பாக, ஒரு மனையின் பக்க அளவுகளை குறிப்பு எடுக்கும் போது, கிழக்கில் முகப்பு பக்கம் இருக்கலாம். இதில், கிழக்கு பக்கத்தின் நீள அளவை குறிப்பிடும் போது, தெற்கில் இருந்து வடக்காக, அல்லது வடக்கில் இருந்து தெற்கு நோக்கி அளக்கும் போது அதன் அளவு என்ன என்பதை குறிப்பிட வேண்டும்.
இதில், கிழக்கு பக்கம், 30 அடி, மேற்கு பக்கம், 32 அடி, தெற்கு பக்கம், 45 அடி, வடக்கு பக்கம், 48 அடி என்று பொதுப்படையாக குறிப்பிடுவது நல்லதல்ல. ஒவ்வொரு பக்க நீளத்தையும் எங்கிருந்து எவ்வளவு என்பதை துல்லியமாக குறிப்பிட வேண்டும்.பொதுப்படையாக அளவுகளை குறிப்பிடும் போது, அக்கம் பக்கத்து மனை உரிமையாளர்கள் எல்லை தாண்டி வந்தது தெரியாமல் போய்விடும். பல இடங்களில் பக்கத்து மனை உரிமையாளர்கள் எல்லை தாண்டும் அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர்.
எனவே, நீங்கள் வாங்கும் மனையின் பக்க அளவுகள் மிக துல்லியமாக இருக்க வேண்டும். அந்த அளவுகளை பத்திரத்தில் சரியாக சேர்ப்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் மனையின் அளவுகள் தொடர்பாக பிரச்னைகள் எழுவதை தடுக்க முடியும். இதில்சொத்து வாங்குவோர் விழிப்புடன் இருப்பது அவசியம் என்கின்றனர் நில அளவை துறை அதிகாரிகள்.

