/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
நவீன்'ஸ் 'ஸ்டார்வுட் செடார்' குடியிருப்பு திட்டம் மேடவாக்கத்தில் கட்டப்படுகிறது
/
நவீன்'ஸ் 'ஸ்டார்வுட் செடார்' குடியிருப்பு திட்டம் மேடவாக்கத்தில் கட்டப்படுகிறது
நவீன்'ஸ் 'ஸ்டார்வுட் செடார்' குடியிருப்பு திட்டம் மேடவாக்கத்தில் கட்டப்படுகிறது
நவீன்'ஸ் 'ஸ்டார்வுட் செடார்' குடியிருப்பு திட்டம் மேடவாக்கத்தில் கட்டப்படுகிறது
ADDED : நவ 01, 2025 06:59 AM
செ ன்னை, மேடவாக் கத்தில், நவீன்'ஸ் நிறுவனத்தின் 'ஸ்டார்வுட் டவர்ஸ்' வளாகத்தில் இறுதி கட்டமாக, 'செடார்' என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
சென்னையின் முன்னணி மற்றும் மக்களின் நம்பகமான, ரியல் எஸ்டேட் நிறுவனமாக நவீன்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில், பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுள்ளன.
அந்த வகையில் மேடவாக்கத்தில், 9.85 ஏக்கர் நிலப்பரப்பில், 'நவீன்'ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ்' என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் இதுவரை, 750க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு வாங்கி மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு இறுதிகட்டமாக, 'நவீன்'ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ் செடார்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. தாராளமான இடவசதியுடன், 1,908 முதல், 2,140 சதுர அடி வரையிலான, வெவ்வேறு அளவுகளில், மூன்று படுக்கை அறை வீடுகள் கட்டப்படுகின்றன.
வீட்டிலேயே அலுவலக பணிக்கான இடம், குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடி பேசி மகிழ்வதற்கான இடம் என, பல்வேறு வசதிகளுடன் இந்த கட்டடம் அமைகிறது.
கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், நுாலகம், குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், சூப்பர் மார்க்கெட், மருந்தகம், மருத்துவ பரிசோதனை கூடம் என, பல்வேறு சிறப்பு வசதிகள் இங்கு ஏற்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து நவீன்'ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஸ்வஜித் குமார் கூறுகையில், “மக்களின் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் இந்த குடியிருப்பை வடிவமைத்து உருவாக்கி இருக்கிறோம்.
''வழக்கமாக மூன்று படுக்கை அறை வீடுகள், 3 பி.எச்.கே., என்று குறிப்பிடப்படும். இந்த குறிப்பிட்ட திட்டத்தில் மக்கள் தங்கள் தேவைக்கு ஏற்பட இடவசதியை மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது என்பதை குறிக்கும் வகையில், 'எல்' என்ற எழுத்து சேர்த்து 3 பி.எச்.எல்.கே., என குறிப்பிடப்பட்டுள்ளது,” என்றார்.

