/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கட்டுமானத்தின் வலிமையை நீட்டிக்கும் 'ஸ்டீல் ஸ்ட்ரக்ச்சர்'-ஆர்.சி.சி., கட்டுமானம்
/
கட்டுமானத்தின் வலிமையை நீட்டிக்கும் 'ஸ்டீல் ஸ்ட்ரக்ச்சர்'-ஆர்.சி.சி., கட்டுமானம்
கட்டுமானத்தின் வலிமையை நீட்டிக்கும் 'ஸ்டீல் ஸ்ட்ரக்ச்சர்'-ஆர்.சி.சி., கட்டுமானம்
கட்டுமானத்தின் வலிமையை நீட்டிக்கும் 'ஸ்டீல் ஸ்ட்ரக்ச்சர்'-ஆர்.சி.சி., கட்டுமானம்
ADDED : ஆக 22, 2025 11:09 PM

இ ன்றைய நவீன கட்டடத் துறையில் 'ஸ்டீல் ஸ்ட்ரக்ச்சர்' மற்றும் ஆர்.சி.சி., ஆகிய இரண்டும் சேர்ந்தே பயன்படுத்தப்படுவது, ஒரு பொதுவான நடைமுறையாகி விட்டது. இது கட்டடத்தின் வலிமை, நிலைத்தன்மை மற்றும் அழகு ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது.
இந்த இரண்டும் சேர்ந்த கட்டுமானத்தால், அதிக வலிமை கிடைக்கிறது. அதாவது, 'ஸ்டீல் பிரேம்' கட்டுமானம் அதிக எடையை தாங்கக்கூடியது. ஆர்.சி.சி., காலம், பீம், ஸ்லாப் ஆகியவை கட்டமைப்பு நிலைத்தன்மையை அதிகரிக்கிறது.
'காட்சியா' உறுப்பினர் அன்னாரீனா கூறியதாவது...
'ஸ்டீல் ஸ்ட்ரக்ச்சர்' மற்றும் ஆர்.சி.சி., ஆகிய இரண்டையும் சேர்த்து பயன்படுத்தும்போது, கட்டடம், 75 முதல், 100 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். சரியான பராமரிப்பு(அழுக்கு அகற்றுதல், பெயின்டிங், துரு நீக்குதல்) இருந்தால் இன்னும் பல ஆண்டுகள் கட்டடங்கள் ஆயுள் இருக்கும்.
கட்டுமானத்தை வேகமாக முடிக்கலாம். வெளிச்சம் மற்றும் இடவசதி அதிகமாக கிடைக்கும். இரும்புக்கு துருப்பிடிக்காமல் பெயின்ட் அடித்தல் வேண்டும். நீர்த் தேக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
சரியான கான்கிரீட் மிக்ஸிங்(எம்., 20 முதல், 30 வரை), சரியான கவர் பிளாக் இடைவெளி(20-25 எம்.எம்.,), சரியான நீர் ஊற்றுதல்(குறைந்தபட்சம், 7-14 நாட்கள்) ஆகியவற்றை, கட்டுமானத்தின்போது கண்காணிக்க வேண்டும்.
ஸ்டீல் மற்றும் ஆர்.சி.சி., சேரும் இடங்களில் ஜாயின்ட் கொடுப்பதில் கவனம் வேண்டும். ஆர்.சி.சி., காலம் அல்லது பீமில் 'ஸ்டீல் மெம்பரை' உட்புகுத்தி, கான்கிரீட்டில் மூடிவைப்பது அவசியம். உதாரணத்துக்கு, ஸ்டீல் பிளேடை அல்லது 'ஐ செக்சனை' ஆர்.சி.சி., காலத்தில், 150 எம்.எம்.,-300 எம்.எம்., வரை உள்ளே வைக்கலாம். இதனால் இணைப்பு தன்மை அதிகரிக்கும்.
ஸ்டீல் காலத்திற்கு கீழே பேஸ் பிளேட்டை வெல்டிங் செய்து, அதை ஆர்.சி.சி., புட்டிங்கில் 'ஏங்கர் போல்ட்' வாயிலாக உறுதி செய்ய வேண்டும். ஏங்கர் போல்டை புட்டிங்கில் உட்புகுத்த வேண்டும். இந்த முறையில் எடை எளிதாக பரிமாற்றப்படுகிறது.
ஸ்டீல் பாகங்களை வெல்டிங் செய்து, அதற்குள் ஆர்.சி.சி.,ஐ கிரவுடிங் செய்யலாம். உராய்வினால் சுருங்காத இடங்களில் இதை பயன்படுத்த வேண்டும். சில சமயங்களில் ஆர்.சி.சி.,யை துளையிட்டு ரசாயன நங்கூரங்கள் வாயிலாக ஸ்டீலை இணைக்கலாம். இது புனரமைப்பு பணிக்கு எளிதாக இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.