/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
சவுரிபாளையம் உட்புறமாக 300 சதுரடி ஓட்டு வீடு என்ன விலைக்கு வாங்கலாம்?
/
சவுரிபாளையம் உட்புறமாக 300 சதுரடி ஓட்டு வீடு என்ன விலைக்கு வாங்கலாம்?
சவுரிபாளையம் உட்புறமாக 300 சதுரடி ஓட்டு வீடு என்ன விலைக்கு வாங்கலாம்?
சவுரிபாளையம் உட்புறமாக 300 சதுரடி ஓட்டு வீடு என்ன விலைக்கு வாங்கலாம்?
ADDED : ஆக 15, 2025 09:00 PM
கிருஷ்ணராயபுரம் கிராமம், தனியார் மால் முன்புறம் சின்னவேடம்பட்டி செல்லும் வழியில், 10 சென்ட் இடம் விலைக்கு வருகிறது. என்ன விலைக்கு வாங்கலாம்?
-நாகப்பன், கணபதி.
10 சென்ட் இடம் என்று சொல்லப்பட்டுள்ளது. அதே சமயம், ரோட்டின் அகலம், மனையின் அகலம் குறித்த தகவல்கள் எதுவும் குறிப்பிடவில்லை. இதனால், விலையை நிர்ணயித்து சொல்வது கடினம். உதாரணமாக, 30 அடி ரோடு, 50 அடி அகலம் என்று இருந்தால், விலையானது சென்ட் ரூ.20 லட்சத்துக்கு போகும். அதுவே ரோடு, 12 அடி அல்லது, 16 அடியாக இருந்து, மனையின் அகலம், 30 அடியாக இருந்தால் ரூ.15 லட்சத் துக்கு குறைவாகவே இருக்கும்.
திருப்பூர் மாவட்டம், நெகமம் கிராமத்தில் மெயின் ரோட்டில் இருந்து, இரண்டு கி.மீ., அடுத்து சாலையின் உட்புறமாக ஆறு அடி தளத்தில், சுமார் இரண்டு ஏக்கர் விவசாய பூமி என்ன விலை கொடுத்து வாங்கலாம்?
- விமலா, திருப்பூர்.
தாங்கள் கூறும் நெகமம் என்பது, கோவை மாவட்டத்தில் இருந்து, 30 கி.மீ., தொலைவில் இருப்பதாக தெரிகிறது. நார் தொழிற்சாலைகள் மற்றும் காற்றாடிகள் இருக்கின்றன. விவசாய நிலமாக இருப்பதால், உங்கள் இடம் ஏக்கருக்கு ரூ.20 லட்சம் பெறும்.
கோவை மாவட்டம், சவுரிபாளையம் பகுதியில் மெயின் ரோட்டில் இருந்து உட்புறமாக, 20 அடி சாலையில், இரண்டு சென்ட் இடம் மற்றும் மிகப் பழமையான, 300 சதுரடி ஓட்டு வீடு என்ன விலை கொடுத்து வாங்கலாம்.
-சேதுராமன், கோவை.
மனையின் அகலம், 25 அடி என எடுத்துக்கொண்டால் பழைய வீட்டை இடித்து புதிதாக தார்சு வீடாக கீழ் மற்றும் முதல் தளம் என, இரண்டு குடியிருப்புகள் கட்டி வாடகைக்கு விடும்போது கிடைக்கும் வருமானத்தை வைத்து கணக்கிட்டால், சென்ட் ரூ.15 லட்சம் என மதிப்பிடலாம்.
தகவல்:
ஆர்.எம்.மயிலேறு
கன்சல்டிங் இன்ஜினியர்.