/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
உங்கள் வீட்டின் ஆயுள் உங்கள் கைகளில்! மழை காலங்களில் நீர்க்கசிவில் தேவை கவனம்
/
உங்கள் வீட்டின் ஆயுள் உங்கள் கைகளில்! மழை காலங்களில் நீர்க்கசிவில் தேவை கவனம்
உங்கள் வீட்டின் ஆயுள் உங்கள் கைகளில்! மழை காலங்களில் நீர்க்கசிவில் தேவை கவனம்
உங்கள் வீட்டின் ஆயுள் உங்கள் கைகளில்! மழை காலங்களில் நீர்க்கசிவில் தேவை கவனம்
ADDED : டிச 14, 2024 02:58 PM

தினமும் நாம் நடைபயிற்சி மேற்கொண்டு ஆரோக்கியம் பேணுவதை போன்று, அடிக்கடி வீட்டையும் பராமரித்தால் அதன் ஆயுளும், அழகும் கூடும். அந்த விதத்தில் வீட்டின் வெளிப்புறத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
மேல்நிலை தண்ணீர் தொட்டியை குறைந்தது, மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்தல் வேண்டும். இதில் முக்கியமாக பறவைகளின் கூடுகள், அவற்றின் எச்சங்கள், இலை தழை ஆகியவை குடிநீர் தொட்டியை சுற்றிலும் சேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார், கோவை மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் தங்கராஜ்.
அவர் மேலும் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது...
ஒவ்வொரு மழைக்குப் பிறகும் மொட்டை மாடி மற்றும் ஜன்னல்களின் சன்சைடுகளின் மேற்பகுதிகளில், மழை நீர் தேங்கியுள்ளதா என்பதையும், வெளிப்புற சுவர் ஓரங்கள், தரைப்பகுதிகளில் வீட்டைச் சுற்றிலும் ஏதேனும் விரிசல்கள் உருவாகின்றனவா, மேல்நோக்கிய நீர்க்கசிவு உள்ளதா என பார்த்து வர வேண்டும்.
கரையான் பாதிப்புகள், எறும்பு புற்றுகள் உருவாகியுள்ளனவா என்பதை, 15 நாட்களுக்கு ஒரு முறை பார்க்க வேண்டும். கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியை, குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.
அவ்வாறு சுத்தம் செய்யும்போது, ஏதேனும் புதிதாகவிரிசல்கள் உள்ளனவா, அருகில் உள்ள மரம் செடிகளின் வேர்கள் ஏதேனும் ஊடுருவி உள்ளதா என்பதையும்,வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் தரை சந்திக்கும் இடத்தில் சுவர்களில் நீர் தன்மை ஏதேனும் புதிதாக தோன்றியுள்ளதா, பூஞ்சைகள் ஏதும் படர்ந்துள்ளனவா என்பதையும், அடிக்கடி கவனிப்பது நல்லது.
காஸ் சிலிண்டர்களுக்கான அறை, மோட்டார் அறை, மின்சாதன மீட்டர் அறை ஆகியவற்றை வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்து, அவற்றில் பூச்சிகள் மற்றும் குப்பை சேராதவாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
வெளிப்புற பூச்சு பாதுகாப்புக்காக, குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மழைமற்றும் வெயிலை தாங்கும் தரமான பெயின்ட் கொண்டு பூசி வந்தால் கட்டடங்களை பாதுகாக்கலாம். இவ்வாறு பராமரித்தால் கட்டடம் மிகுந்த பாதுகாப்புடன், உறுதியுடனும் நீண்ட காலத்திற்கு இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

