sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

ஆலோசனை

/

வீடுகளில் தளம் அமைக்கும் போது கரையான் மருந்து அடிக்க வேண்டும்

/

வீடுகளில் தளம் அமைக்கும் போது கரையான் மருந்து அடிக்க வேண்டும்

வீடுகளில் தளம் அமைக்கும் போது கரையான் மருந்து அடிக்க வேண்டும்

வீடுகளில் தளம் அமைக்கும் போது கரையான் மருந்து அடிக்க வேண்டும்


ADDED : மார் 23, 2024 12:58 AM

Google News

ADDED : மார் 23, 2024 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கட்டட கட்டுமானப்பணி மேற்கொள்ளும், வாசகர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார். கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்க உதவிச்செயலாளரும் பொறியாளருமான ராஜரத்தினம்.

வீடுகளில் தரைத்தளம் அமைக்கும் போது, மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் என்ன?

- ராமசாமி, குப்பேபாளையம்.

கரையான் மருந்து கட்டாயம் அடித்திருக்க வேண்டும். மெட்டல் கான்கிரீட்டிற்கு மேற்பகுதியிலுள்ள துாசுகளையும், கழிவுகளையும் துாய்மைப்படுத்த வேண்டும். அதற்கு மேலே சிமென்ட் பால் ஊற்றிவிட்டு, அனைத்து அறைகளிலும் சமதளமாக இருப்பதை, உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அதற்கு மேல், சிமென்ட் கலவை குறைந்தது ஒரு இன்ச் கனமாவது இருக்க வேண்டும். டைல்ஸ்சின் நீள அகலத்தை பொறுத்து, கலவையின் கனம் மாறுபடும். தற்போது டைல்ஸ் பேஸ்ட் வைத்து பணி மேற்கொள்கின்றனர்.

வீடுகளில் படிக்கட்டுகள் அமைக்கும் போது, மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் என்ன

- கிருஷ்ணகுமார், வடவள்ளி

வீடுகளில் அமைக்கப்படும் படிக்கட்டுகளில், படிகளின் உயரம் 6 இன்ச்களுக்கு குறைவாக இருப்பது அவசியம். அகலம் 10 இன்ச்சிற்கு அதிகமாக இருக்க வேண்டும். கட்டடத்தின் கான்கிரீட் உயரத்தை பொறுத்து, படிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டும்.

அதே போல, படிக்கட்டின் மொத்த அகலம் வீட்டினுள் அமைக்கும் போது, 3 அடியிலிருந்து, 4 அடிக்குள் அமைப்பது நல்லது.

அதே போல், படியின் முன்பகுதி நோசிங் செய்வது அவசியம். படியின் கைப்பிடி சுவர்கள் எஸ்.எஸ்.கிரில் மற்றும் கண்ணாடிகளால் அமைக்கலாம். உறுதியான கிளாஸ் பயன்படுத்துவது சிறந்தது.

வீடுகளில் அமைக்கப்படும் ஜன்னல்களின் அளவுகள், எவ்வளவு இருக்க வேண்டும்

- ராமலட்சுமி, கணபதி

படுக்கை அறைகளை மிகப்பெரியதாக அமைத்துக்கொள்கிறோம். அதனால் ஜன்னல் உயரமும் அகலமும் அதிகமாக வைத்துக்கொள்கிறோம். 4 அடி முதல் 6 அடி அகலமும், உயரம் 4 அடி முதல் 5 அடி வரை உயரத்திலும், படுக்கையறைகளில் அமைக்கலாம்.

வரவேற்பறையில் அமைக்கும் போது, அகலம் ஐந்தடி முதல் 6 அடி வரையிலும் உயரம் 5 அடிமுதல் 6.6 அடி வரை அமைத்துக்கொள்ளலாம். அப்போது காற்றோட்டமும், வெளிச்சமும் நன்றாக இருக்கும்.

சமையல் அறையின் உயரம், அதிகபட்சம் 3.5 அடி வரை வைக்கலாம். சமையல் அறையின் அளவை பொறுத்து, அகலத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

குளியலறையில் 3 அடி நீளம், 2 அடி உயரத்தில் அமைக்கலாம். இதில் எக்சாஸ்ட் விசிறியை பொருத்திக்கொள்ளலாம். காற்றோட்டம் ஏற்படும்.

ரூப் கான்கிரீட் அமைக்கும் போது, வீட்டு உரிமையாளர்கள் கண்காணிக்க வேண்டிய விஷயங்கள் என்ன ?

-ராமச்சந்திரன், பீளமேடு

கான்கிரீட் போடும் போது சிமென்ட், மணல் மற்றும் ஜல்லி ஆகியவை சரிவிகிதத்தில் கலந்திருக்க வேண்டும். 1:2:4 என்ற அளவிலோ 1:1.5:3 என்ற விகிதத்திலோ கலக்க வேண்டும்.

அதே போல், தண்ணீர் ஊற்றுவதும் மிக முக்கியம். கான்கிரீட்டை கொட்டும் போது தண்ணீர் மட்டும் பிரிந்து செல்லக்கூடாது. சரியாக கலக்கப்பட வேண்டும்.

மிக்சர் மிஷினில் கலப்பதே மிகச்சிறந்தது. கைகளில் கலப்பதை தவிர்க்க வேண்டும். சென்ட்ரிங் ஷீட்டிலிருந்து, சிமென்ட்பால் கீழே போகாதவாறு இருக்கும் ஷீட்களை, பயன்படுத்த வேண்டும்.

வீடுகளில் மாடிகளில் தோட்டம் அமைப்பதால், மேல்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் பாதிக்கப்படுமா?

-செந்தில்குமார், பாரதி நகர்

மாடித்தோட்டம் தற்போது அனைத்து நகர்ப்புற வீடுகளிலும் அதிகமாக அமைக்கப்படுகிறது. முதல் மாடியிலுள்ள பால்கனியில், வாட்டர்புரூப்பிங் கோட்டிங் அடித்து, அதன் மேற்பகுதியில் டைல்ஸ் பதித்து மாடித்தோட்டம் அமைக்கலாம். டைல்ஸ் அமைக்கும் போது, நல்ல வாட்டம் கொடுத்து தண்ணீர் வழிந்தோடும் அளவிற்கு அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us