ADDED : ஜன 28, 2026 07:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'போக்ஸ்வேகன் டைரான் ஆர் - லைன்' எஸ்.யூ.வி., கார் நடப்பு காலாண்டில் அறிமுகமாக உள்ள நிலையில், அதன் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது. இது, மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் உள்ள இந்நிறுவன ஆலையில் உற்பத்தியாகிறது.
இந்த காரில் 7 பேர் வரை பயணம் மேற்கொள்ளலாம். இதில், 2 லிட்டர், டி.எஸ்.ஐ., இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. 7 - ஸ்பீடு டி.சி.டி., ஆட்டோ கியர்பாக்ஸ், 7 காற்று பைகள், 360 டிகிரி கேமரா, அடாஸ் லெவல் - 2, 15 அங்குல டச் ஸ்கிரீன், பேனரோமிக் சன்ரூப், 3 - ஜோன் ஆட்டோ ஏ.சி., உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இது, கோடியாக், மெரீடியன், கிளாஸ்டர் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக வருகிறது.

