டி.வி.எஸ்., 'கிங் கார்கோ ஹெச்.டி.,இ.வி.,' 'ஹெவி டியூட்டி' மின்சார சரக்கு ஆட்டோ
டி.வி.எஸ்., 'கிங் கார்கோ ஹெச்.டி.,இ.வி.,' 'ஹெவி டியூட்டி' மின்சார சரக்கு ஆட்டோ
UPDATED : ஆக 27, 2025 08:03 AM
ADDED : ஆக 27, 2025 08:02 AM

'டி .வி.எஸ்.,' நிறுவனம், அதன் 'கிங் கார்கோ ஹெச்.டி., இ.வி.,' என்ற மின்சார சரக்கு ஆட்டோவை அறிமு கம் செய்துள்ளது. இது, 'கன்டெய்னர், பிளாட் டெக், கேபின் சேசிஸ்' ஆகிய மூன்று உடல் அமைப்புகளில் வந்துள்ளது.
இந்த ஆட்டோ, 541 கிலோ எடை வரை சுமக்க முடியும். இதில் 8.89 கி.வாட்.ஹார்., ஆற்றல் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது.
ஒரு சார்ஜில், முழு எடையுடன் 156 கி.மீ., வரை பயணிக்கலாம். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரம் 10 நிமிடம் எடுக்கிறது. இது, மோட்டார் பவர் 15 ஹெச்.பி., டார்க் 40 என்.எம்., வெளிப்படுத்துகிறது. அதிகபட்ச வேகம் 60 கி.மீ.,ராக உள்ளது.
![]() |
500 எம்.எம்., நீரில் பயணிக்கும் திறன், 235 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ், 703 எம்.எம்., சரக்கு ஏற்றும் உயரம் வழங்கப்படுகிறது. எல்.இ.டி., லைட்டுகள், இரு டிரைவ் மோடுகள், லீப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன், 3.4 மீ டர்னிங் ரேடியஸ், 200 எம்.எம்., ட்ரம் பிரேக்குகள், 31க்கும் அதிகமான வாகன இணைப்பு வசதி, நேவிகேஷன், புளூடூத் இணைப்பு ஆகியவை இதர அம்சங்கள் ஆகும்.
வாகன உத்தரவாதம், 1.5 லட்சம் கி.மீ., அல்லது 6 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது.