'சைபர்ஸ்டர்' ரோட்ஸ்டர் இ.வி., உலகின் வேகமான எம்.ஜி., கார்
'சைபர்ஸ்டர்' ரோட்ஸ்டர் இ.வி., உலகின் வேகமான எம்.ஜி., கார்
ADDED : ஆக 06, 2025 07:07 AM

'எ ம்.ஜி.,' நிறுவனம், 'சைபர்ஸ்டர்' என்ற ரோட்ஸ்டர் மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது. இது, உலகின் வேகமான எம்.ஜி., கார் ஆகும். இந்த காரில் இருவர் பயணிக்கலாம்.
100 கி.மீ., வேகத்தை, 3.2 வினாடியில் எட்டும் ஸ்போர்ட்ஸ் காரை இந்நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதன் சேசிஸை, பார்முலா - 1 கார் பந்தைய பொறியாளரான, பேராரியின் 'மார்கோ பைனெல்லோ' ட்யூன் செய்துள்ளார்.
காற்றை எளிதாக கிழித்து, வேகமாக பயணிக்கும் வகையில், காரின் வெளிப்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் காற்று இழுவை குணம் பல ஸ்போர்ட்ஸ் கார்களை விட குறைவு. வளைவுகளில் வேகமாக திரும்பினாலும், கார் கவிழாமல் இருக்க, இதன் சேசிஸ் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காரில், 77 கி.வாட்.ஹார்., லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. டூயல் மோட்டார் ஆல் வீல் டிரைவ் அமைப்பில் வரும் இந்த கார், 580 கி.மீ., ரேஞ்ச் வழங்குகிறது.
மின்சார 'ஸிசர்' கதவுகள், 'அம்பு' வடிவ எல்.இ.டி., டெயில் லைட், 10 வினாடியில் திறந்து மூடும் 'சாப்ட் ரூப்' அமைப்பு, 20 அங்குல அலாய் சக்கரங்கள், 'ரெட் கேலிப்பர்' பிரிமோ பிரேக்குகள், 'பைட்டர் ஜெட்' உட்புற கேபின், 10 அங்குல மற்றும் 7 அங்குலத்தில், மூன்று டிஸ்ப்ளேகள், அடாஸ் பாதுகாப்பு, 4 காற்று பைகள், பிரலி டயர்ஸ் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள்.
இந்த கார், நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
டீலர் : MG Select Chennai - FPL Vehicles : & 9150091690