sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/கடையாணி/எம்.ஜி., மெஜெஸ்டர் 'முரட்டு ஆப்ரோடிங்' செய்ய நவீன எஸ்-.யூ.வி.,

எம்.ஜி., மெஜெஸ்டர் 'முரட்டு ஆப்ரோடிங்' செய்ய நவீன எஸ்-.யூ.வி.,

எம்.ஜி., மெஜெஸ்டர் 'முரட்டு ஆப்ரோடிங்' செய்ய நவீன எஸ்-.யூ.வி.,


ADDED : பிப் 18, 2026 08:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 08:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஜெ.எஸ்.டபுள்யூ., எம்.ஜி.,' நிறுவனம், 'மெஜெஸ்டர்' என்ற இந்தியாவின் முதல் 'டி பிளஸ்' பிரிவு எஸ்.யூ.வி., காரை அறிமுகப்படுத்தி உள்ளது. 41,000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். வினியோகம், மே மாதம் முதல் துவங்குகிறது. இது, 6 மற்றும் 7 சீட்டர் மாடல்களில் வந்துள்ளது.

'குளோஸ்டர்' காரின் அதே உற்பத்தி தளத்தில் வந்துள்ள இந்த எஸ்.யூ.வி.,யில், 2 லிட்டர், டுவின் டர்போ, டீசல் இன்ஜின் கிடைக்கிறது. இந்த இன்ஜினுடன், 8 - ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோ கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது, ரியர் வீல் மற்றும் 4 - வீல் டிரைவில் வருவதோடு, முதல் முறையாக எந்த காரிலும் வராத 'மூன்று டிப்ரண்சியல் லாக்' வழங்கப்படுகிறது. இது, எந்த கடின நிலப்பரப்பையும் எளிதாக கையாள உதவுகிறது. நீரில் பயணிக்கும் திறன், 810 எம்.எம்., வரை உள்ளது.

12.3 அங்குல இரு டிஸ்ப்ளேக்கள், 3 - ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பனரோமிக் சன் ரூப், மசாஜ் வசதியுடன் வென்ட்டிலேட்டட், பவர்டு முன்புற சீட்கள், டூயல் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 12 ஸ்பீக்கர் ஜே.பி.எல்., சவுண்ட் சிஸ்டம், 10 ஆப்ரோட் மோட்கள், கார் இணைப்பு வசதி, 6 காற்று பைகள், 360 டிகிரி கேமரா, அடாஸ் லெவல் - 2 பாதுகாப்பு, எம் - கிரால் மோட் உள்ளிட்ட அம்சங்கள் இதில் இருக்கின்றன.

போட்டியாளர்கள்:


டொயோட்டா பார்ச்யூனர், ஸ்கோடா கோடியாக்

இன்ஜின் - 2 லிட்டர், டுவின் டர்போ, டீசல் பவர் - 212 ஹெச்.பி., டார்க் - 478 என்.எம்., பூட் ஸ்பேஸ் - 343 லிட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் - 220 எம்.எம்., டேங்க் - 75 லிட்டர்



எதிர்பார்ப்பு விலை - ரூ.45 லட்சம் - ரூ.50 லட்சம்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us