தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/எம்.ஜி., 'அடாப்ட்' ஒரே உற்பத்தி தளத்தில் நான்கு கார்கள்

எம்.ஜி., 'அடாப்ட்' ஒரே உற்பத்தி தளத்தில் நான்கு கார்கள்

எம்.ஜி., 'அடாப்ட்' ஒரே உற்பத்தி தளத்தில் நான்கு கார்கள்


ADDED : ஜூலை 22, 2026 07:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2026 07:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'எம்.ஜி.,' நிறுவனம், 'அடாப்ட்' என்ற புதிய கார் உற்பத்தி தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த உற்பத்தி தளத்தின் வாயிலாக நான்கு வகையான 'ஹைபிரிட்' மற்றும் 'மின்சார' கார்களை உருவாக்க முடியும்.

இதில் வரும் பிளக் இன் ஹைபிரிட் காருக்கு, புதிய ஹைபிரிட் என்.ஏ., பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் வெப்பத்திறன் சாதாரண பெட்ரோல் இன்ஜினை விட 7 முதல் 23 சதவீதம் அதிகமாக இருப்பதால், காரின் மைலேஜ் அதிகரித்து, காற்று மாசுபாட்டை குறைக்கிறது.

இந்த இன்ஜினோடு, உலகின் முதல் 'எலக்ட்ரோ மேக்னட்டிக்' இ--கிளட்ச் உடன் வரும் பிரத்யேக 'இ-சி.வி.டி.,' ஹைபிரிட் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. இது, நல்ல எரிபொருள் திறன், மென்மையான கியர் மாற்றங்களை வழங்குவதாக எம்.ஜி., நிறுவனம் கூறுகிறது.

நான்கு வகை கார்கள்:


* மின்சார கார்

* பிளக் இன் ஹைபிரிட் கார்

* ஸ்ட்ராங் ஹைபிரிட் கார்

* ரேஞ்ச் எக்ஸ்டென்டர் ஹைபிரிட் கார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us